- Advertisement -

எதிரி தொல்லை நீங்க முருகர் வழிபாடு

- Advertisement -

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கக்கூடிய சக்தி முருகப்பெருமானுக்கு இருக்கு. பண பிரச்சனையா? மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? கடன் தொல்லையா? திருமணமாகவில்லையா? குழந்தை பாக்கியம் இல்லையா? முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இதோடு சேர்த்து எதிரி தொல்லை நீங்கவும் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா. அதற்கு உண்டான ஒரு எளிமையான புத்தம் புதிய ஆன்மீகம் சொல்லும் ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

எதிரி தொல்லை நீங்க முருகர் வழிபாடு

பொதுவாகவே தினமும் நம்முடைய வீடுகளில் கந்த சஷ்டி கவசம் ஒளிக்க விடுவது ரொம்ப ரொம்ப நல்லது. அதேசமயம் அந்த கந்த சஷ்டி கவசத்தை நம் வாயால் பாடினால் இன்னும் நல்லது. நம்முடைய வீட்டில் கெட்ட சக்திகள் தங்காது. நம்முடைய உடம்பிலும் கெட்ட சக்திகள் தாங்காது. அது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் நோய்நொடி இல்லாமல் கடன் இல்லாமல் ஆரோக்கியமாக வாழவும் இந்த கந்த சஷ்டி கவசம் வழிவகுக்கும் என்பது நம்முடைய காலம் காலமான நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை பின்பற்ற தவறாதீர்கள்.

சரிங்க, எதிரி தொல்லை நீங்க இந்த முருகப்பெருமானை எப்படித்தான் வழிபாடு செய்வது. ஒன்றுமே வேண்டாம். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். தினமும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். முருகப்பெருமானுக்கு முன்பாக பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

‘கட்டு கட்டு கதறிடக் கட்டு, குத்து குத்து கூர்வடி வேலால்’ என்ற இந்த இரண்டு வரிகளை மட்டும் 108 முறை சொல்லி உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரி உங்களை விட்டு விலக வேண்டும் என்று முருகனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கந்த சஷ்டி கவசத்தில் வரக்கூடிய இரண்டு வரிகள் தான் இவை. இதனால் உங்களுடைய எதிரிக்கு எந்த ஆபத்தும் வராது.

அந்த எதிரி உங்களை விட்டு தூர விலகி நின்று விடுவான் அவ்வளவுதான். கண்ணுக்கு தெரிந்த எதிரி, கண்ணுக்குத் தெரியாத எதிரி, உங்களுக்குள்ளவே இருக்கக்கூடிய கோபம் என்ற எதிரி, பேராசை என்ற எதிரி, பொறாமை என்ற எதிரி, இப்படி எல்லா வகையான எதிரிகளையும் அழிப்பதற்கு இந்த இரண்டு வரிகள் போதுமானது.

- Advertisement -

கந்த சஷ்டி கவசத்தை முழுசாக படிப்பது தான் நல்லது. இல்லை என்று சொல்ல வரவில்லை. முழுசாக படிக்க தெரியவில்லை, அதற்கு நேரம் இல்லை என்றாலும் தினம் ஒரு முறை வீட்டில் முழுசாக அந்த கந்த சஷ்டி கவசத்தை தொலைக்காட்சி பெட்டியிலோ, அல்லது கைபேசியிலோ ஒளிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: திடீர் கஷ்டம் தீர வழிபாடு

ஆனால் இந்த இரண்டு வரிகளை உங்கள் வாயால் முருகப்பெருமானை நினைத்து பாடினால் உங்களுக்கு எதிராக செயல்படும் எதிரிகள் தொல்லை ஒழியும் என்பதுதான் நம்பிக்கை. ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாடு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் அந்த முருகப்பெருமானை பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோமா.

- Advertisement -