- Advertisement -

வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் 30.5.2025 வளர்பிறை வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதியோடு சேர்ந்து வந்திருப்பது அதி சிறப்பு. வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இனி வாழ்க்கையில் துன்பம் என்பது இருக்கக் கூடாது. குறிப்பாக வறுமை என்னும் நோய் வீட்டில் எரிந்து சாம்பலாக வேண்டும். வருமானம் பெருகிக்கொண்டே செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான ஒரு பொருள் பஞ்சகாவியம் விளக்கு. இந்த விளக்கை சாதாரண நாளில் வீட்டில் ஏற்றி வைத்தாலே அவ்வளவு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். நாளை வளர்பிறை சதுர்த்தி திதியில், வெள்ளிக்கிழமையில் இந்த விளக்கை ஒரு சூட்சம முறையில் நாம் ஏற்றி வைக்கப் போகின்றோம். நாளைய தினம் மட்டும் இந்த விளக்கை வீட்டில் நீங்கள் ஏற்றி விட்டால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் நாளையோடு தீர்ந்தது என்று முடிவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை பூஜை அறைக்கு அலங்காரம் மிக மிக அவசியம் தேவை‌. சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, எப்போதும் உங்கள் வீட்டில் ஏற்றி வைக்க கூடிய விளக்குகளை ஏற்றி வையுங்கள். ஒரு தாம்பூல தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவால் அந்த தாம்பூல தட்டில் பிள்ளையார் சுழி போடுங்கள்.

வழக்கமாக பிள்ளையார் சுழி போட்டு, எந்த காரியத்தை துவங்கினாலும் அது வெற்றியைத் தரும். வீட்டில் மாதத் தேவைக்கு மல்லிகை ஜாமானம் எழுதினாலும், நாம் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி தான் போடுவோம். பிள்ளையார் சுழிக்கு அப்படி ஒரு மகிமை.

- Advertisement -

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு, அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து. இந்த வரிகளுக்கு ஏற்ப பிள்ளையார் சுழி போட்டு செய்யும் இந்த பரிகாரமும், உங்களுக்கு சுகங்களை மட்டுமே கொடுக்கும். ஒரு தாம்பல தட்டில் அரிசி மாவால் பிள்ளையார் சுழி போட்டு, அந்தப் பிள்ளையார் சுழிக்கு கீழ்ப்பக்கமாக ஒரு பஞ்சகவ்ய விளக்கை வைத்து நெய் ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றி விடுங்கள்.

இந்த பஞ்சகவ்விய விளக்கை வீட்டில் ஏற்றினால் தரித்திரம் விலகும். மகாலட்சுமி அம்சம் பெருகும் என்பதன் நம்பிக்கை. பஞ்சகவ்ய விளக்கு முழுவதும் எரிந்து, ஒரு யாகம் செய்ததுபோல உங்கள் வீட்டை சுத்தம் செய்து விடும். அந்த பிள்ளையார் சுழிக்கு மேலே பஞ்சகவ்ய விளக்கை வைத்து ஏற்றக்கூடாது. மேல் பகுதியில் பிள்ளையார் சுழி இருக்க, அந்த பிள்ளையார் சுழிக்கு கீழ்பக்கத்தில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நாளை 30-05-2025 வளர்பிறை சதுர்த்தி திதி

எரியக்கூடிய இந்த பஞ்சகவ்ய விளக்கிற்கு முன்பு, உங்கள் குடும்ப தேவைக்காக நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அதை மகாலட்சுமி தடையில்லாமல் கொடுத்து விடுவாள் என்பதும் நம்பிக்கை. இறுதியாக வழக்கம் போல தீப தூப ஆராதனை காண்பித்து உங்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிள்ளையார் சுழி போட்டு நாளைய தினம் வீட்டில் நீங்கள் செய்யும் இந்த வழிபாடு உங்களுக்கு பெரிய அளவில் பிரமாண்ட வெற்றியை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -