- Advertisement -

வளமான வாழ்வு பெற வளர்பிறை அஷ்டமி திதி

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால், நம்முடைய கடன் சுமை எல்லாம் தேய்ந்து போகும். வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால், வாழ்வு வளம் பெறும். இதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் சூட்சமம். அதுவும் இன்றைய நாள், சனிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதியானது வந்திருக்கிறது.

இன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால், நமக்கு சனியால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும். காரணம் சனி பகவானுக்கு, குருவாக திகழ்வர் காலபைரவர். இந்த நாளை நிச்சயம் நாம் தவறவிடவே கூடாது. எளிமையான பைரவர் வழிபாட்டை இன்றைய தினம் எப்படி செய்வது, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

இன்று உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவன் ஆலயத்திற்கு சென்று, சிவபெருமானை வழிபாடு செய்து கொள்ளுங்கள். சிவனுக்கு வில்வ இலைகளை வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ளவும். சிவன் கோவிலை வலம் வந்து இறுதியாக கால பைரவரை வழிபாடு செய்யும்போது, அவருக்கு பிரத்தியேகமாக இன்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிபகவானுக்கு தான் இந்த எள் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைய தினம் பைரவருக்கு எள் தீபம் ஏற்றி நம்முடைய வேண்டுதலை வைத்தால், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சின்ன வெள்ளை நிற துணியில் கொஞ்சமாக எள் போட்டு முடிச்சாக கட்டி தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பைரவர் சன்னிதானத்தில் 2 மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்திருக்கும் இந்த முடிச்சை போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

கால பைரவரிடம் உங்களுக்கு எவ்வளவு செல்வ வளம் தேவையோ, அதை எல்லாம் மனம் உருகி கேளுங்கள். தங்க நகை வேண்டுமா? ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை இன்று வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய தேவைகளுக்கு எவ்வளவு பணம், தங்கம் தேவையோ அதை இன்றைய தினம் பைரவர் முன்பு நின்று மனமுருகி கேட்டால் நிச்சயம் அந்த செல்வ வளம் உங்கள் கையை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: 9-11-2024 கோஷ்டாஷ்டமி வழிபாடு

சனிபகவானால் தொழிலில் தடை, சனி பகவானால் வேலையில் பிரச்சனை, சனி பகவானால் இல்லற வாழ்க்கையில் பிரச்சனை, என்பவர்களும் இன்றைய தினம் காலபைரவரை இந்த விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் தடையாக வரவே மாட்டார். ஏனென்றால் சனிபகவானுக்கு குருவாகத் திகழும் கால பைரவரை நீங்கள் வணங்கும்போது, சனிபகவான் உங்களுக்கான கஷ்டத்தை குறைத்து விடுவார். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -
Published by