
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவருடைய குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தேவையான அளவு வருமானம் ஏற்பட வேண்டும். தேவையான அளவு வருமானம் ஏற்பட வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ சிறப்பாக நடைபெற வேண்டும். இந்த தொழில் அல்லது வேலையை பொறுத்துதான் இந்த உலகத்தார் நமக்கு மதிக்கும் மரியாதையும் தருகிறார்கள். அப்படிப்பட்ட தொழிலிலும், வேலையிலும் சிறப்பாக இருப்பதற்கு வாராகி அம்மனின் எந்த நாமங்களை உச்சரிக்க வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த காலத்தில் அதிக அளவில் பலராலும் வழிபடக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நல்ல ஒரு சிறப்பான வாழ்க்கையாக மாற்றக்கூடியவளாக வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் முழுமனதோடு வழிபடும் பொழுது நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும். அதிலும் ஒவ்வொரு வரத்திற்கும் ஒவ்வொரு விதமாக நாம் வேண்டுதல் வைக்க வேண்டும். அந்த வகையில் வேலை மற்றும் தொழிலில் சிறந்து விளங்க எப்படி வாராகி அவனை வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை நித்திய வழிப்பாடாக செய்ய வேண்டும். அதாவது தினமும் செய்ய வேண்டும். எப்பொழுதும் நாம் தினமும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவோம் அல்லவா? அப்பொழுது செய்தால் போதும். இதற்காக பெரிதும் நாம் எந்தவித செலவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வீட்டு பூஜை அறையில் வராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
என்றைக்கு இந்த வழிபாட்டை ஆரம்பிக்கிறீர்களோ அன்றைய தினம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தை மாலை கோர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் வாராகி படத்திற்கு ஏற்றவாறு கோர்த்து படத்திற்கு போடுங்கள். அடுத்ததாக அம்மனுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அம்மனுக்கு மாதுளம் பழம் என்பது மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மாதுளம் பழத்தை எடுத்து அதன் முத்துக்களை மட்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு அம்மனுக்கு முன்பாக வைத்து விடுங்கள். ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான தண்ணீரையும் வைத்து விடுங்கள்.
இவ்வாறு வைத்துவிட்டு வாராகி அம்மனை மனதார நினைத்து “ஓம் பக்தவாராகியை நமஹ, ஓம் அனுகிரக தேவியை நமஹ, ஓம் ஆஷாட பஞ்சமி ரூபிண்யை நமஹ” என்னும் வாராகி அம்மனின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இந்த நாமங்களை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்துவிட்டு அந்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடலாம்.
எலுமிச்சம் பழமாலை காயே ஆரம்பித்த பிறகு அதை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டுவிட்டு மறுபடியும் புதிதாக வேறு எலுமிச்சம் பழங்களால் மாலை கோர்த்து போடலாம். அப்படி இல்லை என்றால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த எலுமிச்சம்பழம் மாலையை மாற்றலாம். எங்களால் வாராவாரம் இப்படி மாற்ற முடியாது என்று நினைப்பவர்கள் மாதத்தில் ஒரு நாள் வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி வரும் அல்லவா அன்றைய தினம் சாற்றலாம். ஆனால் தினமும் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வாராகி அம்மனுக்கு வையுங்கள். வாராஹி அம்மனுக்கு பிடித்த பொருட்களாக பார்த்து வைப்பது மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே: தொலைந்த பொருளை மீட்டு தரும் பரிகாரம்
முழு மனதோடு இந்த மூன்று நாமங்களை கூறுபவர்கள் வாராகி அம்மனின் இந்த மூன்று நாமங்களை கூறுபவர்களுடைய வேலை மற்றும் தொழிலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சிக்கல்களும் நீங்கி அதில் சிறப்பாக செயல்படுவார்கள்.