- Advertisement -

ஆவணியில் வரலட்சுமி விரதம் மேற்கொள்வது ஏன்? அதன் புராண கதை என்ன? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன!

பொதுவாக ஆடி மாதம் முடிந்து வரும் முதல் பௌர்ணமிக்கு முன்பு ஆவணி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வரலட்சுமி விரதமாகும். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் நிலைக்கவும், குடும்பத்தில் சுபீட்சம் பெருகவும், கன்னிப் பெண்கள் மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமைய வேண்டி விரதமிருந்து மகாலட்சுமியை முறையாக வீட்டிற்கு அழைத்து வழிபடும் நோன்பு தான் வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வட மாநில மக்களாலும் பெருமளவு விரும்பி மேற்கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படை புராண கதை என்ன? வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மன்னாதி மன்னர்கள் காலத்தில் செல்வச் செழிப்பிற்கு குறைவில்லாமல் இருக்கும். கஜானா முழுவதும் செல்வங்களால் நிரம்பியிருக்கும் மன்னர் பரம்பரையில் வழி வழியாக இந்த வரலட்சுமி விரத முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் சௌராஷ்டிர தேசம் எனப்படும் ஒரு ஊரில் சுசீந்திர தேவி என்னும் மகாராணி, இந்த வரலட்சுமி விரதம் முறையாக கடைபிடித்து வந்தார். ஆனால் காலப்போக்கில் செல்வம் அளவிற்கு மீறி அதிகம் சேர்ந்த காரணத்தினால் தலைக்கனம் கொண்டு திரிந்தார். மகாலட்சுமி பூஜைகளை அவர் முறையாக வழிபடாமல், குடும்ப உறவுகளை சரியாக கவனித்துக் கொள்ளாமல் அசட்டையாக இருந்து விட்டார்.

- Advertisement -

இதனால் அவர்களுடைய செல்வ செழிப்பானது படிப்படியாக குறைந்து போனது. மகாலட்சுமியை அவமதிக்கும் இல்லத்தில் செல்வம் தங்குவதில்லை. குடும்ப உறவுகளை போற்றி பாதுகாக்காத பெண்களிடத்தில் லக்ஷ்மி கடாட்சம் எப்பொழுதும் இருப்பதுமில்லை. இந்த மகாராணிக்கு சாருமதி என்கிற மகள் இருந்தார். அவருக்கு வெளியூரில் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார்கள். சிறு வயதிலிருந்தே வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்ட சாருமதி மிகவும் பக்தி சிரத்தையுடன் தொடர்ந்து அதை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது எப்படி மேற்கொள்வது? என்பது அவருக்கு தெரியாது.

இளவரசி சாருமதி தன் கணவன் மற்றும் மாமியார், மாமனார் என்று அத்தனை குடும்ப உறவுகளையும் முறையாக பேணி பாதுகாத்து வந்தார். அவர்களுக்கு உரிய பணிவிடைகளை மனம் கோணாமல் இன்முகத்துடன் தன் கடமை என்று எண்ணி செய்து வந்தார். இதனால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து அவர் கனவில் தோன்றி வரலட்சுமி விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பதையும், அதன் வழிமுறைகளையும் தெரிவித்தார். இந்த விரதத்தை பற்றிய முறையை மற்றவர்களுக்கு கூறினாலும், இந்த கதையை கூறினாலும் விரதம் இருந்த முழு பலன் கிடைக்கும் என்றும் கூறி மறைந்தார்.

- Advertisement -

இதனால் மனம் மகிழ்ந்த இளவரசி சாருமதி மகாலட்சுமி கனவில் தோன்றி கூறிய வழிமுறைகளை கடைபிடித்து ஒவ்வொரு வருடமும் மகாலட்சுமியின் திருவுருவ சிலை வைத்து முறையாக வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து வந்தார். இதனால் அவர்களுடைய நாடும், நாட்டு மக்களும் செழிப்புற்று இருந்தது. கலசம் வைத்து மகாலட்சுமியின் முகத்திற்கு அலங்காரம் செய்து முறையாக மகாலட்சுமியை அழைத்து, மந்திர உச்சாடனம் செய்து பக்தி சிரத்தையுடன் பெண்கள் இந்த விரத முறையை கடைப்பிடித்து வந்தால் குடும்பத்தில் அமைதி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும்.

எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் இன்றி குடும்பத்தில் செல்வச் செழிப்பு மேலோங்கும். கன்னிப் பெண்கள் தொடர்ந்து வழிபாட்டில் கலந்து கொண்டு நோன்பு நூலை கட்டிக் கொண்டால் மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். மாங்கல்ய பலம் நீடித்து கணவனுடைய ஆயுள் அதிகரிக்க பெண்களால் கடைபிடித்து வரும் இந்த நோன்பு வரும் ஆவணி மாதம் 4-ஆம் நாளான வெள்ளிக் கிழமையில் வருகிறது. தவறாமல் அனைவரும் கடைபிடித்து மகாலட்சுமியின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -