
ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ஆடி வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம். பலரும் இன்றைய நாளில் தங்கள் வீட்டிற்கு வரலட்சுமியை அழைத்து வழிபாடு செய்திருப்பீர்கள். பலரும் சுமங்கலி பூஜையும் செய்து இருப்பீர்கள். இன்னும் சிலரோ கலசம் வைத்தும் கலசம் வைக்காமலும் வழிபாடு செய்திருப்பீர்கள். இவ்வாறு செய்ததோடு மட்டுமல்லாமல் இன்று இரவு இந்த ஒரு வழிபாட்டையும் சேர்த்து செய்யும் பொழுது நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரமும் வறுமையும் கடனும் நீங்கும், மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் வாசம் செய்யும் ஒரு பாக்கியமும் உண்டாகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே மகாலட்சுமி தாயார் வீட்டில் வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக திகழ்வது சமையலறை என்றும் அந்த சமையல் அறையை பூஜை அறைக்கு நிகராக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் தான் வரலட்சுமி விரத நாளான இன்றும் நாம் எப்படி பூஜை அறையில் வரலட்சுமியை அழைத்து வந்து அமர வைத்தோமோ அதே போல் நம்முடைய சமையலறையில் இன்று இரவு அன்னலட்சுமியை அமர வைக்க வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.
இன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக சமையலறையில் இருக்கக்கூடிய எச்சில் பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். சமையல் அறையே சுத்தமாக இருக்க வேண்டும். எந்தவித கழிவுகளும் சமையலறையில் இருக்காதவாறு எடுத்து வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பு இருக்கக்கூடிய திண்டில் ஒரு சிறிய தட்டை வைத்து அது முழுவதும் பச்சரிசியை பரப்ப வேண்டும்.
அதற்கு பக்கத்திலேயே வீட்டில் அன்னபூரணியின் சிலை இருக்கும் பட்சத்தில் அந்த சிலையை வைத்து அந்த சிலைக்கு முன்பாக ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். வீட்டில் அன்னபூரணியின் சிலை இல்லை என்பவர்கள் ஒரு சிறிய கண்ணாடியை வைத்து அந்த கண்ணாடிக்கு முன் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு அந்த தட்டிற்கும் கண்ணாடிக்கும் முன்பாக “ஸ்ரீ அக்சயம்” என்று பச்சரிசி மாவினால் எழுத வேண்டும். இதில் அக்சயம் என்று எழுதும்போது க் மற்றும் ம் மேல் புள்ளி வைப்போம் அவ்வாறு புள்ளி வைக்கும் இடத்தில் மஞ்சள் குங்குமத்தை வைத்து மலர்களால் அந்த வார்த்தையை அலங்காரம் செய்ய வேண்டும்.
இப்படி செய்துவிட்டு முழு மனதோடு அன்னபூரணியை மனதார நினைத்து வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும், தனதானியம் அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு படுக்கச் சொல்ல வேண்டும். மறுநாள் காலையில் பச்சரிசியை எடுத்து நம்முடைய அரிசி பானையில் போட்டு விட வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: விளக்கு ஏற்றும் மந்திரம்
வரலட்சுமி விரத நாள் அன்று வரலட்சுமி தாயார் இரவு நம்முடைய வீட்டில் உலா வருவாள் என்றும் அந்த நேரத்தில் நம்முடைய சமையலறையில் நாம் இப்படி எழுதி வைப்பதன் மூலம் அவள் மனம் மகிழ்ந்து அன்னபூரணியாக நம்முடைய வீட்டில் நிலைத்திருப்பாள் என்றும் ஒரு ஐதீகம் நிலவுகிறது. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் இந்த ஒரு வழிபாட்டை செய்து அன்னபூரணியை வீட்டில் நிலையாக தங்க வைக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.