- Advertisement -

வாஸ்து தோஷம் நீங்க எளிய ஆன்மீக பரிகாரம்

- Advertisement -

வாஸ்து பிரச்சனை என்றாலே வீட்டை இடித்து சரி செய்ய வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் உடனடியாக வீட்டை இடித்து சரி செய்வதற்கு நம்மிடம் வசதி இருக்க வேண்டும். நீங்கள் வாடகை வீட்டில் வசித்து வருபவர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீட்டில் வசிப்பவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஃபிளாட் வாங்கி அதில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். வாஸ்துவால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை என்ன செய்யலாம்.

வாஸ்து தோஷம் நீங்க எளிய வழிபாடு

நீங்கள் வசிக்கக் கூடிய இடத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை மட்டும் நீங்கள் எடுக்க வேண்டும். வாடகை வீட்டிலும் இதை சுலபமாக எடுக்கலாம்க சொந்த வீட்டிலும் இதை எடுக்கலாம். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் எப்படி எடுப்பது என்ற சந்தேகம் சில பேருக்கு வரும். உங்களுக்கும் தரைப்பகுதி என்று ஏதாவது ஒரு இடம் இருக்கும் அல்லவா. செடி கொடிகள் வைத்திருப்பார்கள். அந்த இடத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது.

- Advertisement -

எடுத்த மண்ணில் கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை தெளித்து விடுவோம். பூஜை அறையில் ஒரு தாம்பூல தட்டில் இந்த மண்ணை கொட்டி பரப்பி அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, சுத்தமான நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை முதலில் மனதார பிரார்த்தனை செய்து விடுங்கள்.

அதன் பிறகு வாஸ்து பகவானை மனதார நினைத்துக் கொண்டு, ‘வாஸ்து பகவானே எங்கள் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. தெரிந்தோ தெரியாமலோ இந்த வீட்டின் வாஸ்து எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதை நீ தான் சாதகமாக அமைத்து தர வேண்டும்’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து ‘ஓம் வாஸ்து பகவானே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி ஏதாவது ஒரு பிரசாதம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டின் தலைவன் அல்லது தலைவி யாராவது ஒருவர் இந்த பூஜையை வீட்டில் செய்ய வேண்டும். வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். ஒரு முறை எடுத்த மண்ணையே அடுத்தடுத்த வாரத்திற்கு நீங்கள் பயன்படுத்தலாம். தொடர்ந்து 11 வாரம் திங்கட்கிழமை வாஸ்து பகவானை நினைத்து இந்த பூஜையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்தால் வாஸ்துவால் ஏற்பட்ட தோஷம் விளக்கும் என்பது நம்பிக்கை.

பிரச்சினைகளை கொடுத்த வந்த வாஸ்து பகவான், நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பான். இப்படி பூஜை செய்த மண்ணை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, நிலை வாசற்படியில் கட்டலாம். மேல் சொன்னபடி இந்த பூஜையை வீட்டில் செய்து முடித்துவிட்டு உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போங்க.

- Advertisement -

மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றி இந்த வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக்கொள்ள வேண்டும். இதே போல வழிபாட்டை 11 வாரம் செய்து விட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்தது எழுதி வச்சுக்கோங்க. எவ்வளவு பெரிய தோஷத்தையும் நீக்கக்கூடிய செலவில்லாத ஆன்மீகம் பரிகாரம் இது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர ரோஜா செடி பரிகாரம்

வீட்டை இடித்து கட்டுவதற்கு லட்சக்கணத்தில் செலவாகும். ஆனால் நெய் வாங்க, தேங்காய் எண்ணெய் வாங்க திரிவாங்க அவ்வளவு செலவாகுது அல்லவா. நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -