- Advertisement -

வாழ்க்கையில் ஜெயிக்க பிறந்த நட்சத்திர நாள் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இது அனைவருக்கும் சாத்தியமாகாது. ஒரு சிலருக்கு எவ்வளவு தான் முயற்சிகள் செய்தும் அந்த முயற்சிகளில் வெற்றி என்பதே ஏற்படாமல் இருக்கும். பலவிதமான தடைகளையும் அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பிறந்த நட்சத்திர நாளன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நட்சத்திர நாள் வழிபாடு

மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றது என்றும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு நாள் வரும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த நட்சத்திரங்களில் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் தான் நாம் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கின்றன. அந்த நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களும் இருக்கின்றன. நம்முடைய நட்சத்திரத்திற்கு ஏற்றார் போல் நாம் வணங்கக்கூடிய தெய்வங்கள் எது என்பதை அறிந்து அந்த தெய்வத்தை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். இருப்பினும் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று புலம்புபவர்கள் செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை செய்ய ஆரம்பிக்க கூடிய நாள் நாம் பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாள் தான். இந்த தீப வழிபாட்டை வீட்டிலேயும் செய்யலாம் ஆலயத்திலும் செய்யலாம். பிறந்த நட்சத்திர நாளன்று வீட்டில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபம் நெய் தீபமாகவும் இருக்கலாம், நல்லெண்ணெய் தீபமாகவும் இருக்கலாம். பிறகு எப்பொழுதும் போல் உங்களுடைய வழிபாட்டை நீங்கள் செய்து கொள்ளலாம்.

ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய தெய்வம் எது என்பதை அறிந்து அந்த தெய்வம் இருக்கக்கூடிய ஆலயத்தில் அந்த தெய்வத்திற்கு முன்பாக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இயன்றவர்கள் தங்களின் பெயரில் அர்ச்சனையும் செய்யலாம். தொடர்ச்சியாக தினமும் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்து கொண்டே வரவேண்டும். அடுத்து வரக்கூடிய உங்களுடைய பிறந்த நட்சத்திர நாள் வரை இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறந்த நட்சத்திர நாள் அன்று 27 தீபங்களை ஏற்றி வைத்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த 27 தீபங்களை வீட்டில் ஏற்றுவதை விட ஆலயத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இப்படி 27 நட்சத்திரங்களும் வரக்கூடிய 27 நாட்களும் நாம் தீபம் ஏற்றி நம்முடைய நட்சத்திரத்திற்கு உகந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்து கொண்டு வரும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய அனைத்து விதமான தடைகளும் விலகிச் செல்லும்.

இதையும் படிக்கலாமே: காரிய வெற்றி உண்டாக அட்சதை பரிகாரம்

எளிமையான வழிப்பாடாக இருந்தாலும் இந்த வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு அந்த தீபச்சுடரொளியை போலவே வாழ்க்கையும் பிரகாசமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -