நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது குருவின் அருள் இருந்தால்தான் அந்த காரிய வெற்றி என்பது உண்டாகும். இது சுப காரியங்களாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியான காரியங்களாக இருந்தாலும் சரி, வேலை ரீதியான காரியங்களாக இருந்தாலும் சரி இவை அனைத்திற்குமே குரு அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படி குரு அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு அட்சதை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரிய வெற்றி உண்டாக அட்சதை பரிகாரம்
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். குருபகவான் நமக்கு சாதகமான பலனை தரும் பட்சத்தில் தான் நமக்கு நடைபெறக்கூடிய அனைத்து விதமான சுபகாரியங்களும் நடைபெறும் என்றும் ஒருவேளை அவர் பாதகமான சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி என்பது ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் குரு எங்கு எந்த இடத்தில் இருக்கிறார்? யாரை பார்க்கிறார் என்பதை ஜாதக ரீதியாக ஆராய்ந்து பிறகு அந்த செயலை செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை நாம் என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம் இருப்பினும் வியாழக்கிழமை செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு பொருள்தான் வேண்டும் அதுதான் அட்சதை. பச்சரிசியில் மஞ்சள் மற்றும் பன்னீர் கலந்து தயார் செய்யக்கூடிய அட்சதை தான் நமக்கு வேண்டும். இந்த அட்சதையை வீட்டிலேயே தயார் செய்து நீங்கள் யாரை குருவாக நினைத்து மரியாதை செலுத்துகிறீர்களோ அவர்களிடம் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். உயிரோடு இருப்பவர்கள் ஆக இருந்தால் அவர்கள் கையில் கொடுத்து திரும்ப வாங்கி மஞ்சள் நிற பட்டு துணியில் வைத்து மூட்டையாக கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் சமாதி அடைந்து விட்டார் என்றால் அவருடைய சமாதியில் வைத்து வழிபாடு செய்து பிறகு அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலரோ தெய்வங்களையும் சித்தர்களையும் குருவாக பாவித்து வழிபாடு செய்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த சித்தரை நாம் குருவாக நினைக்கிறோமோ அந்த சித்தருடைய ஜீவ சமாதிக்கு சென்று அவருடைய ஜீவசமாதியில் இந்த அட்சதையை மஞ்சள் நிற பட்டு துணியில் கட்டி வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு அதை எடுத்து நம்முடனே வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குருவின் அருளை பரிபூரணமாக பெற முடியும். இதன் மூலம் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: பணம் சேர பௌர்ணமி வழிபாடு
மாதா பிதா குரு தெய்வம் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். குருவின் அருளை பரிபூரணமாக பெற்றவர்களால் மட்டுமே தான் தெய்வத்தின் அருளையும் பெற முடியும். அதனால் குருவின் அருளை பெறுவதற்குரிய இந்த எளிமையான பரிகாரத்தை செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.