- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அரசாங்க வேலை, பதவி உயர்வு சம்பள உயர்வு, அரசியலில் பெரிய செல்வாக்கு, என அடுக்கடுக்கான முன்னேற்றத்தைப் எளிதாக பெற இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் போதும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதிலும் நல்ல சம்பளத்துடன் கிடைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அதிலும் சிலர் அரசாங்க வேலை தான் கிடைக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதற்கான பல முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பார்கள் இதே போல தான் ஒரு சிலருக்கு அரசியலில் நல்ல ஈடுபாடு இருக்கும். அதில் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று யோசித்து செயல்படுவார்கள். இப்படியானவர்களில் அநேகம் பேர் இருந்தாலும் கூட ஒரு சிலரால் மட்டுமே அந்த இடத்தை தொட முடிகிறது. அப்படியானால் மற்றவர்கள் அதை எட்ட முடியாதா? என்ற ஒரு கேள்விக்கான பதிலே இந்த பதிவு.

இந்த வேலை வாய்ப்பு அரசியல் செல்வாக்கு நல்ல சம்பளம் கிடைத்த வேலையில் அடுத்தடுத்து பதவி உயர்வு இப்படி அந்தஸ்தான அனைத்தையும் தரக்கூடிய கிரகமெனில் அது சூரிய கிரகம் தான். ஆகையால் தான் வேலை தொடர்பான அனைத்து பரிகாரங்களும் நாம் சூரிய பகவானை முன் நிறுத்தியே செய்கிறோம். அப்படி வணங்கக் கூடிய இந்த சூரிய பகவானை ஒரு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் வழங்கும் போது இதற்கான பலன் பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்
அரசாங்க வேலை தொடர்பான அனைத்து காரியங்களையும் நாம் அஸ்வினி நட்சத்திரத்தில் செய்வது மிகவும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. அஸ்வினி நட்சத்திரமானது உச்சம் அடைவது சூரிய கிரகம். ஆகையால் அஸ்வினி நட்சத்திரம் வரும் அந்த நாளில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்யும் பொழுது அரசாங்கம் தொடர்பான அனைத்து விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்கும். அது வேலை தொழில் வருமானம் இப்படி எதுவாக இருந்தாலும் அது நல்ல முறையில் நடக்கும்.

இப்படி சூரிய பகவானை வணங்கும் பொழுது அவருக்கென்ன தனியான ஆலயங்கள் இருப்பின் செய்யலாம் அல்லாத பட்சத்தில் சிவபெருமானை வணங்கினாலே சூரிய பகவானை வணங்குவதற்கான பலன்கள் கிடைக்கும். ஆகையால் இந்த நட்சத்திர நாளில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கு சூரியகாந்தி மலரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஆலயத்திலேயே சூரிய பகவான் தனியாக இருந்தால் அங்கே இந்த சூரியகாந்தி மலரை வைத்து வழிபடலாம் அல்லது சிவபெருமானை சூரியகாந்தி மலரை வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அஸ்வினி நட்சத்திரம் செவ்வாய் இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் ஆனது மேஷ ராசிக்கு உரியது. இந்த இரண்டும் மலை நெருப்பு தத்துவத்தை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்த தலமான திருவண்ணாமலையில் உள்ள சிவபெருமானை தொடர்ந்து வணங்கி வரும் பொழுது இது போன்ற நல்வாழ்த்துகள் உங்களுக்கு பெருகிவரும் அதிலும் அரசியலில் பெரிய அளவு வந்து சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திருவண்ணாமலை சிவ வழிபாட்டை தொடர்ந்து செய்யும் போது நிச்சயம் அதற்கான நற்பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வட்டி கட்டியே வாழ்க்கையை தொலைத்தவர்கள் காலபைரவரை நினைத்து 27 முந்திரியை வைத்து இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் கிரகம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. இதையெல்லாம் நாம் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கான நேரத்தில் நாம் வழிபாடு பரிகாரமும் செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான பலனை நாம் முழுமையாகவும், விரைவாகவும் பெறலாம். இந்த பதிவில் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாள் என்று செய்ய வேண்டிய வழிபாடு குறித்தும் அந்த நட்சத்திரத்திற்கு தொடர்பான கிரகம் தெய்வம் குறித்து வழிபாட்டையும் இந்த வழிபாடை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் எதையெல்லாம் பெறலாம் என்பதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதை பின்பற்றி பலனடையலாம். என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -