
பூரண கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, சர்க்கரை கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை என்று ஏராளமான கொழுக்கட்டை வகைகளில் வேர்கடலை பொடியை சேர்த்து செய்யப்படும் இந்த சாஃப்டான பஞ்சு போன்ற வெல்லக் கொழுக்கட்டை ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். வித்தியாசமான முறையில், அருமையான சுவையில் வெல்லக் கொழுக்கட்டை தயாரிப்பது எப்படின்னு? தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
சாஃப்டான வெல்லக் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை – கால் கப், ஏலக்காய் – 3, பொடித்த வெல்லம் – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப், நெய் – ஒரு ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், பச்சரிசி மாவு – ஒரு கப்.
சாஃப்டான வெல்லக் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
வெல்லக் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் கால் கப் அளவிற்கு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஆறிய பின் வேர்க்கடலைகளை சேர்த்து அதனுடன் மூன்று ஏலக்காய்களை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெல்லத்தை நன்கு பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் அளவிற்கு சரிசமமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பாகு காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் கொதித்து வரும் பொழுது, ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு கொள்ளுங்கள். நீங்கள் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியையும் சேர்த்து கலந்து விடுங்கள்.
பின்னர் இதனுடன் நீங்கள் துருவிய தேங்காய் அரை கப் அளவிற்கு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் கலவை நன்கு கொதித்து வர வேண்டும். கொதித்து வரும் சமயத்தில் ஒரு கப் அளவிற்கு பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இடியாப்ப மாவு இருந்தாலும் நீங்கள் சேர்க்கலாம். வறுத்த, வறுக்காத எந்த மாவாக இருந்தாலும் பரவாயில்லை.
மாவு சேர்த்ததும் இடைவிடாமல் மிதமான தீயில் அடுப்பை வைத்து விட்டு கிண்டி விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு கெட்டியாக மாவு கொழுக்கட்டைக்கு பிடிப்பது போல வந்ததும், அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் கைகளில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ளுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பிடி கொழுக்கட்டைக்கு பிடிப்பது போல கொழுக்கட்டைகளை பிடித்து விரல்களால் ஒரு அழுத்து அழுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே:
சுட்ட இட்லி மீந்து போய்விட்டதா? சுடச்சுட மொறு மொறுன்னு பத்தே நிமிடத்தில் பக்கோடா இப்படி மட்டும் செஞ்சு பாருங்க ஒரு இட்லி கூட இனி வீணா போகாது!
பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே இட்லி தட்டை வைத்து எல்லா கொழுக்கட்டைகளையும் அடுக்கி வையுங்கள். பின்னர் மூடியை மூடி நெருப்பை கூட்டி வைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் மட்டும் ஆவியில் நன்கு வேக வைத்து எடுத்தால் சூப்பரான சுவையான பஞ்சு போல சாஃப்டான பிடி வெல்லக் கொழுக்கட்டை ரெசிபி ரெடி! இப்படி செஞ்சு ஒருமுறை சாப்பிட்டு பாருங்க, இனி கொழுக்கட்டை செய்யணும்னா இப்படித்தான் நீங்களும் செய்வீங்க!