இட்லி மீந்துவிட்டதா? மொறு மொறுன்னு இப்படி இட்லி பக்கோடா செஞ்சு பாருங்க. எல்லாமே காலி ஆகிடும்

idli-pakkoda_tamil
- Advertisement -

இட்லி மீந்து போனால் பொதுவாக உப்புமா செய்து கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மொறுமொறுன்னு கிரிஸ்ப்பியான சூப்பரான சுவையில் பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இதுவரை ட்ரை பண்ணலன்னா, இப்பவே நாலு இட்லியை பிச்சு போட்டு ட்ரை பண்ணி பாருங்க. சுட்ட இட்லியில் மொறு மொறு பக்கோடா பத்தே நிமிடத்தில் பொரித்து எடுப்பது எப்படி? அப்படின்னு தான் இந்த பதிவில் இனி பார்க்கப் போகிறோம்.

இட்லி பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி 4, கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, உப்பு – கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

இட்லி பக்கோடா செய்முறை விளக்கம்:
இட்லி பக்கோடா செய்வதற்கு முதலில் மீந்து போன இட்லிகள் நான்கு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எவ்வளவு இருந்தாலும், அதற்கு ஏற்ப பொருட்களை நீங்கள் கூட குறைத்துக் கொள்ளலாம். நான்கு இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸியில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். உதிரி உதிரியான இட்லி மாவு நமக்கு கிடைக்கும்.

இதனுடன் ஒரு கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு போட்டுக் கொள்ளுங்கள், அப்போது தான் கிரிஸ்பியாக வரும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடுங்கள். இட்லியில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் கால் ஸ்பூனுக்கும் குறைவாக கொஞ்சம் போல உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் சீவி விட்டு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சேருங்கள்.

- Advertisement -

ரெண்டு பச்சை மிளகாய்களை பொடிப்பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். வாசனைக்கு சோம்பு சேர்த்து இதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டுக் கொள்ளுங்கள். பின் நறுக்கிய கருவேப்பிலை இலைகளையும் சேர்க்கவும். இப்போது கைகளால் நன்கு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கலந்து விடுங்கள். இது பக்கோடா மாவு பதத்திற்கு நன்கு ஈர பதத்துடன் கெட்டியாக வரும். எல்லா இடங்களும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்தபடி கலந்து விட்ட பின்பு அதை அப்படியே வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீச்சு பரோட்டா சாப்பிட இனி கடைக்கு போக வேண்டாம். இந்த ரெசிபி தெரிந்தால், நீங்களும் வீச்சு புரோட்டா மாஸ்டராகி வீட்டிலேயே, வீச்சு பரோட்டா போடலாம்.

பின்னர் சட்டியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். எண்ணெய் கொதித்த பின்பு மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு சிறு சிறு பக்கோடாக்களாக மாவை எடுத்து போடுங்கள். எல்லா புறமும் சிவக்க வெந்து வர எடுத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான்! இட்லி பக்கோடா ரெசிபி நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு ரொம்பவே பிடிச்சு போயிடும்.

- Advertisement -