- Advertisement -
வீட்டு குறிப்புகள்

பழைய வெள்ளி கொலுசு புதுசு போல மின்ன

- Advertisement -

தங்கம் பெரும்பாலானோரின் விருப்பமான அணிகலனாக இருந்தாலும் இன்றளவும் வெள்ளியிலும் சில பொருட்களை அணிந்து கொள்ள மக்கள் விரும்பத் தான் செய்கிறார்கள். அதிலும் வெள்ளியில் அணியும் காலணியின் மதிப்பு காலத்திற்கும் குறையாமல் அப்படியே தான் இருக்கிறது. இதன் மவுசு குறையாத வரையில் கொலுசுகளின் தேவையும் குறையாமல் இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இந்த வெள்ளி கொலுசுகளை பொறுத்தவரையில் வாங்கும் போது இருக்கும் பளபளப்பு கடைசி வரை நீடிப்பது கிடையாது. இதை வாங்கிய சில நாட்களுக்குள்ளாகவே அதன் நிறம் மாறி விடும். அதன் பிறகு அதை சுத்தப்படுத்துவதற்கென கடைகளில் கொடுத்தால் அதிக பணமும் செலவாகும். இனி நீங்கள் கருத்துப் போன அல்லது பழைய நிறம் மாறிய வெள்ளி கொலுசுகளை வீட்டில் எளிமையாக சுத்தம் செய்து கொள்ள அருமையான ஐடியாவை இந்த வீட்டுக் குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பழைய வெள்ளி கொலுசு புதிது போல மாற்ற

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான அதே நேரத்தில் புதுமையானதாக இருக்கும். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கெட்சப் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த வகையான கெட்சப்பாக இருந்தாலும் பரவாயில்லை அதை உங்கள் பழைய கொலுசுகளின் மீது தடவி பத்து நிமிடம் ஊற வைத்த பிறகு லேசாக ப்ரஷ் வைத்து தேய்த்தால் கொலுசு புதிது போல மின்னும்.

அடுத்து டூத் பேஸ்ட் இது இன்னும் எளிமையான முறை தான் கொலுசுகளின் மீது வெள்ளை நிறத்தில் உள்ள டூத் பேஸ்ட்டை தடவி பத்து நிமிடம் வரை ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு பிரஷ் வைத்து தேய்த்து பாருங்கள் உடனே பளிச்சென்று மின்ன ஆரம்பித்து விடும்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் வினிகர், ரெண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா இரண்டும் போட்டு அதில் கருத்து போன வெள்ளி கொலுசை சேர்த்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு எடுத்து லேசாக தேய்த்தாலே போதும் கொலுசுகள் பளிச்சென்று மாறி விடும்.

அதே போல் சுடுதண்ணீரில் நாம் துணிக்க வைக்க பயன்படுத்தும் சோப்பு தூள் போட்டு அதில் இந்த கொலுசுகளை போட்டு 15 நிமிடம் வரை ஊற வைத்து அதன் பிறகு எடுத்து தேய்த்தால் கொலுசில் உள்ள அழுக்குகள் கூட மொத்தமாக நீங்கி புதுசு போல மின்னும்.

- Advertisement -

இதில் இன்னொரு முறையும் பின்பற்றலாம். அதற்கு அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அலுமினிய தாளையும் பேக்கிங் சோடாவையும் சேர்த்தால் தண்ணீர் நன்றாக நுரைத்து வரும். அதில் பழைய வெள்ளி கொலுசை போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கொலுசு சிறிது நேரம் அந்த தண்ணீரிலே இருக்கட்டும். அதன் பிறகு எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுத்தால் அழுக்கு முழுவதுமாக நீங்கி விடும். இந்த முறையை பின்பற்றும் போது நாம் அதிகம் தேய்க்க கூட வேண்டாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை பழச்சாறும், கல் உப்பும் சேர்த்து நன்றாக கரைந்த பிறகு அதில் நிறம் மாறிய வெள்ளி கொலுசுகளை போட்டு ஊற விட்டு அதன் பிறகு எடுத்து தேய்த்தால் அழுக்கு கறைகள் எல்லாம் நீங்கி கொலுசு புதிது போல இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மழைக்காலத்திற்கு ஏற்ற அருமையான டிப்ஸ்

பழைய வெள்ளை கொலுசை புதிது போல மாற்ற மேற் சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு எது எளிமையாக உள்ளதோ அதை பயன்படுத்தி பழைய கருத்த கொலுசை கூட புதிது போல மாற்றி காலில் அணிந்து கொண்டு வலம் வரலாம்

- Advertisement -
Published by