மழைக்காலத்திற்கு ஏற்ற அருமையான டிப்ஸ்

lady rainy tips
- Advertisement -

வீட்டில் பெண்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். அதுவும் இந்த மழைக்காலத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை இருக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற வேலைகளை சட்டென்று முடித்து விடலாம் . வாங்க இப்போது அது என்னென்ன குறிப்புகள் என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த மழைக்காலத்தில் கால்மிதி தான் அதிகம் பயன்படும். ஆனால் இந்த சமயத்தில் அதை அடிக்கடி துவைத்து காய வைக்கவும் முடியாது. உங்கள் மேட்டின் அளவிற்கு ஏற்றார் போல நாப்கின்களை எடுத்து மேட்டில் ஒட்டி வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மேட்டை ஒரு தலைகாணி உறையில் போட்டு அதை வாசலில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் மழையில் நனைந்து வந்து காலை மேட்டில் வைக்கும் போது ஈரம் அனைத்தையும் நாப்கின் எடுத்துக் கொள்ளும். மேட் ஈரம் ஆகவே ஆகாது தலையணை உறையை மட்டும் துவைத்தால் போதும். இதற்காக அதிகம் நாப்கின் செலவாகுமே என்று யோசிக்க வேண்டாம். மழைக்காலத்தில் துணிகள் ஈரமாகி அதை அடிக்கடி துவைத்து செய்யும் வேலையை விட இது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

மழைக்காலத்தில் இன்னொரு பெரிய பிரச்சனை தீப்பெட்டிகள் அடிக்கடி நமத்து போய் விடும். இதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து தீக்குச்சிகளை அதில் போட்டு விடுங்கள். தீப்பெட்டியின் ஓரத்தில் இருக்கும் அந்த மருந்து பகுதியை எடுத்து இந்த டப்பாவின் மேல் பகுதியில் டபுள் டேப் வைத்து ஒட்டி விடுங்கள். இதன் பிறகு நீங்க டப்பாவில் இருக்கும் குச்சியில் எடுத்து இதில் உரசினால் போதும் தீக்குச்சி உடனே பற்றி கொள்ளும். தீப்பெட்டி பிரச்சனை இருக்காது.

- Advertisement -

அதே போல மழைக்காலத்தில் இந்த சின்ன சின்ன பூச்சிகள் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவற்றையெல்லாம் சமாளிக்க தினமும் சாம்பிராணி போடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த சாம்பிராணியில் வீணாகக் கீழே தூக்கிப் போடும் பூண்டு தோலை சேர்த்து போட்டால் இதன் வாடைக்கு வீட்டில் பூச்சி தொந்தரவு கொசு தொந்தரவு எதுவும் இருக்காது.

அடுத்தது மழைக்காலத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். இந்த நேரத்தில் நாம் மெழுகுவத்தி அதிகம் பயன்படுத்துவோம் அப்படி பயன்படுத்தும் மெழுகுவத்தியை ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் வைத்து அதில் இந்த மெழுகுவர்த்தியை வைத்து எரிய விடுங்கள். மெழுகுவர்த்தி சீக்கிரம் தீர்ந்து போகாது நீண்ட நாள் வரும்.

- Advertisement -

மழைக்காலத்தில் எப்போதுமே துணிகளில் ஒரு வித ஈரவாடை வீசும். அதற்கு பீரோவில் நான்கு ஐந்து சாக்பீஸ் வரை ஒன்றாக ரப்பர் பேண்ட் போட்டு வைத்து விட்டால் ஈரவாடை அடிக்காது. அதே போல் இந்த மழைக்காலத்தில் பாய்களில் பூஞ்சை பிடித்து வாடை வரும். அதே நேரத்தில் பாயும் வீணாகி விடும். இதை சமாளிக்க பாயை சுருட்டி வைக்கும் போது அதன் உள்ளே நியூஸ் பேப்பர் வைத்து சுருட்டி வைத்தால் இந்த தொல்லையும் இருக்காது.

இந்த மழைக்காலத்தில் வெங்காயம் பூண்டு போன்றவை வாங்கி வைத்தால் சீக்கிரத்தில் அழுகி விடும். அப்படி ஆகாமல் இருக்க இவையெல்லாம் கொட்டி வைக்கும் டப்பாவின் அடியில் நியூஸ் பேப்பர் வைத்தால் போதும். இவை எல்லாம் சீக்கிரத்தில் அழுகாது வாடையும் வீசாது.

இதையும் படிக்கலாமே: பழைய கவரிங் செயினை புதிது போல் மாற்ற டிப்ஸ்.

இந்தப் பதிவில் உள்ள சின்ன சின்ன குறிப்புகள் உங்கள் வீட்டு வேலையில் பெரிய அளவில் குறைக்க பயன்படும் உங்களுக்கு பயன்படுமானால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -