- Advertisement -
வீட்டு குறிப்புகள்

வெள்ளி பூஜை பொருட்களை இப்படி சுத்தம் பண்ணா கொஞ்சம் கூட கஷ்டமே படாமல் பைசா செலவு இல்லாம நிமிடத்தில் பளிச்சின்னு மாத்திடலாம். இந்த முறறையில் சுத்தம் செய்த பூஜை பொருட்கள் சீக்கிரத்தில் கறுத்து போகாது.

- Advertisement -

வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வதை காட்டிலும் பூஜை பொருட்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதுவும் எண்ணெய் கறை படிந்து வெள்ளி பூஜை பொருட்களை சுத்தம் செய்வது மிகப் பெரிய வேலை. இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் வெள்ளி பொருட்கள் எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

குறிப்பு: 1
இந்த முறையில் வெள்ளி பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறத்திலான பேஸ்ட்டை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இந்த பேஸ்ட்டை பூஜை பொருட்களின் மீது சேர்த்து பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு பிரஷ் கொண்டு தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் எல்லாம் கறை நீங்கி பளிச் சென்று மாறி விடும். பூஜை பாத்திரங்களை தேய்க்க எப்பொழுதும் தனியாக பிரஷ் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு: 2
இந்த முறையிலும் நாம் மேற்கூறிய முறையிலே தான் சுத்தம் செய்ய போகிறோம். ஆனால் இங்கு சுத்தம் செய்ய பயன்படும் பொருள் மட்டும் வேறு. இந்த முறையில் சுத்தம் செய்வதற்கு பேஸ்ட்க்கு பதிலாக விபூதியை பயன்படுத்த போகிறோம். இது அனைவரும் அரிந்த பழைய முறை தான் இந்த முறையில் சுத்தம் செய்தாலும் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறும்.

குறிப்பு : 3
இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. இதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்வீடை ஊற்றிய பிறகு, நம் வீட்டில் அலுமினியம் காயில் பேப்பர் அல்லது மாத்திரை கவர் இருந்தால் அதை நறுக்கி சேர்த்து கொதிக்க விடுங்கள். அதன் பிறகு நாம் வைத்திருக்கும் பூஜை பாத்திரங்களை எல்லாம் இதில் சேர்ந்த பின் அடுப்பு அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பூஜை பாத்திரங்கள் சுடு தண்ணீரில் சிறிது நேரம் இருக்க வேண்டும். தண்ணீர் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், பூஜை பொருட்களை எடுத்து பிரஷ் கொண்டு லேசாக தேய்த்து விடுங்கள். பூஜை பாத்திரங்களில் உள்ள எண்ணெய் கறை முதற் கொண்டு நீங்கி பளிச்சென்று மாறி விடும்.

சுத்தம் செய்த பூஜை பாத்திரங்கள் எல்லாம் சீக்கிரம் கருக்காமல் இருக்க, தேய்த்த பிறகு ஒரு காட்டன் துணி வைத்து நன்றாக துடைத்து வெயிலில் காய வைத்து க் கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜை பாத்திரங்களின் மீது கொஞ்சம் விபூதி கொஞ்சம் கற்பூரம் இரண்டையும் பவுடர் செய்து பவுடரை பூசி பொருட்களின் மீது தேய்த்து வைத்து விட்டால் சீக்கிரத்தில் இந்த வெள்ளி பூஜை பொருட்கள் கருக்காது.

இதையும் படிக்கலாமே: இனி மிக்ஸியை யூஸ் பண்ணும் போது இந்த சின்ன டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணி பாருங்க. அப்புறம் வாழ்நாள் முழுவதும் உங்க மிக்ஸி புதுசு போலவே இருக்கும். இதுக்கு அப்புறம் உங்க பழைய மிக்ஸியை புதுசுனு சொன்ன அப்படியே நம்பிடுவாங்க

வெள்ளி பூஜை பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்திய இந்த குறிப்புகள் எல்லாம் மிக மிக எளிமையானவை தான். இதற்கு என எதையும் தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வைத்து இவற்றையெல்லாம் சுத்தம் செய்து விடலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -