இனி மிக்ஸியை யூஸ் பண்ணும் போது இந்த சின்ன டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணி பாருங்க. அப்புறம் வாழ்நாள் முழுவதும் உங்க மிக்ஸி புதுசு போலவே இருக்கும். இதுக்கு அப்புறம் உங்க பழைய மிக்ஸியை புதுசுனு சொன்ன அப்படியே நம்பிடுவாங்க.

- Advertisement -

நம் வீட்டில் அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களில் மிக்ஸிக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு என்றே சொல்லலாம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மிக்ஸியை நாம் பயன்படுத்தும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். நாம் ஒரு முறை வாங்கிய மிக்ஸியை மறுப்படி மாற்ற வேண்டிய அவசியமே இருக்காது. எந்த மாதிரியான குறிப்பை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிக்ஸியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றாலே அதில் ஜார்ருக்கு தான் முதலிடம். எப்போதும் ஜாரில் பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைக்கும் போது எடுத்த உடனே அதிக வேகம் வைத்து அரைக்க கூடாது முதலில் ஒரே ஒரு சுற்று விட்டு நாம் சேர்த்திருக்கும் பொருள்கள் ஒன்றும் பாதியுமாக அரைப்பட்ட பின்பு இரண்டாவது மூன்றாவது சுற்று என மாற்றி அரைக்க வேண்டும். இப்படி அரைத்தால் தான் மிக்ஸியில் ஜார் பிளேட் அனைத்தும் அதிக நாட்கள் வருவதுடன் மோட்டரும் பழுதாகாமல் இருக்கும்.

- Advertisement -

இட்லிக்கு கொஞ்சமாக மாவு அரைக்க வேண்டும் என்றால் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்வோம். அப்படி அரைக்கும் போது மிக்சி மோட்டார் அதிகம் சூடாக கூடாது என்பதற்காக ஐஸ் கியூப்களை அப்படியே சேர்த்து அரைப்போம். அப்படி செய்யவே கூடாது. இதனால் மோட்டார் கண்டிப்பாக பழுதடைந்து விடும். இதற்கு பதிலாக அரைக்கும் பொருளை கொஞ்சம் நேரம் பிரிட்ஜில் வைத்து குளுமைப்படுத்திய பிறகு அரைக்கலாம் அல்லது குளிர்ந்த நீரை ஊற்றி அறைக்கலாம் நேரடியாக ஐஸ் கியூபை போடக் கூடாது.

அதே போல் தான் ஜூஸ் தயாரிக்கும் போதும் ஐஸ் கியூபுகளை நேரடியாக போடக் கூடாது. கடைகளில் நேரடியாக போட்டு எடுப்பார்களே என்று உங்களுக்கு தோன்றலாம். கடைகளில் வைத்திருக்கும் ஜாரில் மோட்டாரில் கெப்பாசிட்டி அதிகமாக இருக்கும். ஆனால் நாம் வீட்டிற்கு பயன்படுத்தும் மிக்ஸியில் மோட்டாரில் அவ்வளவு கெப்பாசிட்டி இருக்காது.

- Advertisement -

மிக்ஸியில் பிளேட் கூர்மையாக இல்லை என்று சால்ட் உப்பு, முட்டை ஓடு போன்றவற்றை எல்லாம் ஜாரில் சேர்த்து அரைத்தால் பிளேட் ஷார்பாகி விடும் என்று சிலர் செய்கிறார்கள் அதுவும் மிகப்பெரிய தவறு. பிளேட் லூசாகி விட்ட பிறகு அல்லது மழுங்கி விட்ட பிறகு அப்படியே நாம் பயன்படுத்தும் போது அதுவும் மோட்டாரை பாதிக்கும் எனவே இது போல பிளேட் ஷார்ப் இல்லாமல் ஆகி விட்டால் முடிந்த வரையில் மாற்றி விடுவது நல்லது.

மிக்ஸி ஜாரின் மீது இருக்கும் பெல்ட்டை நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். இதனால் அந்த பெல்ட்டின் இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போவதுடன், நாம் சமைக்கும் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமலும் இருக்கும். இதே போல் ஜாரையும் பயன்படுத்திய பிறகு உடனே கழுவி வைத்து விட வேண்டும். ஜாரை சுத்தம் செய்ய கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி ஒரே ஒரு சுற்று விட்டு எடுத்த பிறகு அலசி ஜாரை நேரடியாக நிமிர்த்தி வைத்து காய வைக்க வேண்டும்.

- Advertisement -

சில மிக்ஸிகள் அரைக்கும் போது அதிக சத்தம் கேட்கும். அது போன்ற சமயத்தில் மிக்ஸிக்கு அடியில் கார்ட் போர்ட் வைத்து அதன் பிறகு மிக்ஸியை வைத்து அரைத்து பாருங்கள். சத்தம் அவ்வளவாக கேட்காது அதே போல் மிக்ஸியை பயன்படுத்தியவுடன் நாம் சுவிட்சை மட்டும் ஆப் செய்து பிளக்கை எடுக்காமல் விட்டு விடுவோம். இதனால் மிக்ஸியின் மோட்டார் பழுதாகும் வாய்ப்பு அதிகம். எப்போதும் மிக்ஸியை பயன்படுத்திய பிறகு சுவீட்சை ஆப் செய்தவுடன் பிளக்கையும் தனியாக எடுத்து மிக்ஸியில் சுற்றி வைத்து விட வேண்டும்.

அதே போல் மிக்ஸியை சுத்தம் செய்கிறேன் என்று தண்ணீர் ஊற்றி துடைக்க கூடாது. ஏதாவது ஒரு காட்டன் துணியில் லேசாக தண்ணீர் தொட்டு துடைத்த பிறகு உடனே வேறு துணி வைத்து நன்றாக துடைத்து விட வேண்டும். மிக்ஸியில் உள்ளே ஈரம் பட்டு விட்டாலும் மிக்சி சீக்கிரம் பழுதடைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்பாடு முடிந்த பின் கிடைக்கும் சாம்பலை இனி தூக்கி போடாதீர்கள்! இதற்கு பயன்படுத்துங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

அது மட்டுமின்றி ஜாரை குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விட வேண்டும். இந்த குறிப்புகளை எல்லாம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், ஒரு முறை வாங்கிய மிக்ஸியை பல வருடங்களுக்கு மாற்ற வேண்டிய அவசியமே இருக்காது. மிக்ஸியும் புதுசு போலவே இருக்கும்.

- Advertisement -