- Advertisement -

வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வழிபாடு

- Advertisement -

இன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அனைவருக்கும் பெருமாளின் தரிசனம் கிடைத்தது. எம்பெருமானின் ஆசிர்வாதத்தால் நாம் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக மாறட்டும். வாழ்ந்து முடிந்த பின்பு நாம் செல்லக்கூடிய பாதையும் சொர்க்கமாக இருக்க வேண்டும், என்ற வேண்டுதலை பெருமாளிடம் வைத்து இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம். இன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி திரியானது இருக்கிறது.

மார்கழி மாதத்தில் வந்திருக்கும் இந்த வைகுண்ட ஏகாதேசி திதி பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த நாள். பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த நாள் என்றால், அது மகாலட்சுமிக்கும் உகந்த நாள் தானே. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதிலும் இன்று வெள்ளிக்கிழமை. ஆக ஒரே கல்லில் 2 மாங்காய். மகாலட்சுமி பெருமாள் இரண்டு பேரையும் ஒருசேரசேர்ந்து வழிபாடு செய்யும்போது, நம்முடைய பணக்கஷ்டமும் மனக்கஷ்டமும் தீரும்.

- Advertisement -

இன்றைய பொருளாதார சூழ்நிலை எல்லோருக்குமே ஓரளவுக்கு பின்தங்கி தான் இருக்கிறது. பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உண்டான கஷ்டம் இருக்கு. நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், அவர்களுக்கு உண்டான கஷ்டம் இருக்கு. ரொம்பவும் பணக்கஷ்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கேட்கவே வேண்டாம். மூன்று வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறார்கள்.

இப்படி பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இன்று ஒரு எளிமையான பரிகாரம். பூஜையறையில் இந்த விளக்கை ஏற்றி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் நிச்சயம் உங்களுடைய வருமானம் பெருகும் கடன் சுமை குறையும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு முதலில் ஒரு தாம்பூல தட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அது பித்தளை தட்டாக இருப்பது சிறப்பு. அதில் ஒரு கைப்பிடி துளசி இலை, ஒரு கைப்பிடி மருதாணி இலை இரண்டையும் ஒன்றாக கலந்து பரப்பி வைத்துக் கொள்ளுங்கள் நடுவே கொஞ்சம் மண் அகல் விளக்கு வைக்க இடம் வைத்துக் கொள்ளுங்கள்.

தயார் செய்து வைத்திருக்கும் இலைகளுக்கு நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு “ஓம் நமோ நாராயணா ! ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி !” என்ற இந்த இரண்டு மந்திரத்தையும் 108 முறை சொல்லலாம். இரண்டு மந்திரத்தையும் ஒரு சேர சொல்லுங்கள். பிரித்து சொல்லாதீர்கள். முதலில் நாராயணர், பிறகு மகாலட்சுமி மந்திரம். பிறகு நாராயணர் மகாலட்சுமி என்று மந்திரத்தை மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் எரிந்து முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அந்த ஒரு மணி நேரமும், பூஜை அறையில் அமர்ந்து இறைவனை பிரார்த்தித்து வரங்களைக் கேட்டால் நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும். இன்றைய தினம் இறைவனுக்காக 1 மணி நேரம் ஒதுக்குவதில் எந்த தவறும் கிடையாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த விளக்கை இன்று மாலை பூஜை அறையில் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய தவறவிட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: ஏகாதசி விரதம் பூர்த்தியடைய துவாதசி அன்று செய்ய வேண்டியது

நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பாருங்கள். உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் நல்லது நடக்கும். இன்றைய தினம் துளசி செடியிலிருந்து, துளசி இலைகளை பறிக்கக் கூடாது. கடையிலிருந்து உதிறி துளசிகளை வாங்கிக் கொள்ளுங்கள். மருதாணி செடி வீட்டு பக்கத்தில் இருந்தாலும் அல்லது அக்கம் பக்கம் வீட்டாரிடம் இருந்தாலும் கேட்டு கொஞ்சமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு 10 இலை கிடைத்தால் கூட போதும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நல்ல வழியை காட்டும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by