- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

தினமும் தலைக்கு வைக்கும் தேங்காய் எண்ணெயில் இந்த 1 பொருளை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தாலே போதும். முடி வெட்ட வெட்ட காடு போல வளர தொடங்கி விடும்.

- Advertisement -

முடி வளர்ச்சிக்கு முடிவே இல்லாமல் எத்தனையோ குறிப்புகளை பின்பற்றி பார்த்து விட்டோம். ஆனால் பயன் இல்லை. முடி உதிர்வு குறையவே இல்லை. முடி வளரவே மாட்டேங்குது என்பவர்களுக்கு மிக மிக சுலபமான ஒரு குறிப்பு இது. தினமும் தலையில் தேய்க்க கூடிய தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு வச்சுக்கோங்க. அந்த தேங்காய் எண்ணெயை தலையில் தடவி வாங்க. நிச்சயமா இரண்டு வாரத்தில் நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். முதல் இரண்டு வாரத்தில் முடி உதிர்வு குறையும்‌. அடுத்த இரண்டு மாதத்தில் முடி வளர்ச்சியை நிச்சயமாக பார்க்க முடியும்.

இன்றைக்கு நாம் வேம்பாலம் பட்டையை வைத்து தான் குறிப்பை பார்க்க போகின்றோம். வேம்பாலம் பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை எண்ணெயில் போட்டால் எண்ணெய் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக 1/2 லிட்டர் அளவு வாங்கிக் கொள்ளுங்கள். 1/2 லிட்டர் அளவு சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய்க்கு 50 கிராம் அளவு வேம்பாலம்பட்டை போதும். தேங்காய் எண்ணெயில் இந்த வேம்பாலம் பட்டையை போட்டுவிட்டு அந்த எண்ணெயை தினம் தோறும் தலைக்கு தேய்த்து வரலாம். (இந்த வேம்பாலம் பட்டையை எண்ணெயில் போட்டவுடன், அந்த எண்ணெய் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.)

- Advertisement -

எண்ணெய் தீர்ந்ததும் அந்த வேம்பாலம் பட்டையில் இன்னொரு முறை 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி பயன்படுத்துங்கள். இரண்டு முறை பயன்படுத்திய பின்பு வேம்பாலம் பட்டையை மாற்றினால் போதும். இந்த எண்ணெய் தலைமுடிக்கு அவ்வளவு நன்மையை தரும். எவ்வளவோ செலவு செய்து ஷாம்பு, ஹேர் ஆயில் போட்டு தலைமுடி வளராதவர்கள் கூட இந்த சின்ன குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக வித்தியாசத்தை உணர்வீர்கள்.

இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? வீட்டிலேயே இருப்பவர்களாக இருந்தால் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பீர்கள் அல்லவா அதேபோல இந்த எண்ணெயை கையில் ஊற்றி நன்றாக ஸ்கேல்பில் படும்படி மசாஜ் செய்துவிட்டு முடியின் நுனி வரை இந்த எண்ணெயை தடவி அப்படியே விட்டுவிடலாம். தலைக்கு குளிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வாரத்தில் இரண்டு நாள் எப்போதும் போல தலைக்கு குளிச்சுக்கோங்க.

- Advertisement -

நீங்கள் தினமும் வேலைக்கு செல்பவர்கள் என்றால், தலைக்கு தினமும் இந்த எண்ணெயை வைக்க முடியவில்லை என்றால், தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் இரவு தலையில் இந்த எண்ணெயை வைத்து நன்றாக மசாஜ் செய்து அப்படியே கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். மறுநாள் காலை தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். இப்படி செய்து வந்தாலே உங்களுடைய முடி நல்ல ஆரோக்கியத்தை பெறும்.

அழகான முடி வேண்டும் நிறைய செலவு செய்யக்கூடாது என்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்வதோடு சேர்த்து கூடவே முருங்கைக்கீரை, கருவேப்பிலை, நெல்லிக்காய், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், நட்ஸ் வகைகள் என்று உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு வர வேண்டும். நிச்சயமாக உங்களுடைய முடி வளர்வது உறுதி என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -