
உக்ர தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் இருக்கின்றன. இருப்பினும் பக்தர்களால் அன்பாக அம்மா என்று அழைக்கக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவள் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு உரிய 9 நாட்களை தான் ஆஷாட நவராத்திரி என்று கூறுகிறோம். அந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்கும் பலவிதமான அற்புத பலன்கள் உண்டாகும் என்றே கூறலாம். அந்த வகையில் நீண்ட நாட்களாக நிறைவேறாத வேண்டுதல் நிறைவேறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெண் தெய்வங்களுக்கு உகந்த ராத்திரிகளாக திகழ்வது நவராத்திரி என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி. நவராத்திரி சமயத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவியையும் நாம் வழிபாடு செய்வோம். அதேபோல்தான் ஆஷாட மாதம் என்று கூட கூறக்கூடிய ஆனி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை ஆஷாட நவராத்திரி என்றும் அந்த நவராத்திரி வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்குரிய நவராத்திரி என்றும் கூறப்படுகிறது. அந்த நவராத்திரி சமயத்தில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்வது பலவிதமான பலன்களை நமக்கு அள்ளித் தரும் என்றே கூறலாம்.
ஏதாவது ஒரு வேண்டுதல் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கிறது. எப்படிப்பட்ட முயற்சியாலும் பலனளிக்கவில்லை என்று நினைப்பவர்கள் தெய்வத்திடம் மட்டுமே முறையிடுவார்கள். அப்படி முறையிடக்கூடிய முறை என்பது இருக்கிறது. எந்த நேரத்தில் எப்படி நம்முடைய வேண்டுதலை கூறினால் அது நிறைவேறும் என்ற சூட்சுமமும் இந்த பிரபஞ்சத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூட்சுமத்தை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கக்கூடிய நாளிலிருந்து அது நிறைவடையக்கூடிய நாள் வரை அதாவது தொடர்ச்சியாக ஒன்பது நாட்களும் நாம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாம் பூஜை அறைக்கு செல்ல வேண்டும், தீபம் ஏற்ற வேண்டும், அர்ச்சனை செய்ய வேண்டும், பூஜை மேற்கொள்ள வேண்டும் என்ற எந்தவித வழிமுறையும் கிடையாது. இந்த பரிகாரத்தை சரியாக காலை 9 மணிக்கு அல்லது இரவு 9 மணிக்கு செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு நோட்டும் ஒரு சிவப்பு நிற பேனாவும் இருந்தால் போதும்.
சரியாக 9:00 மணிக்கு நோட்டை எடுத்து சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி முதலில் “வாராகி தாயே போற்றி” என்று எழுதிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாக எழுத வேண்டும். அப்படி எழுதும் பொழுது எந்தவிதமான எதிர்மறை வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது. தொடர்ச்சியாக ஒன்பது முறை எழுதிவிட்டு “நன்றி தாயே” என்று கடைசியாக எழுத வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது நாட்களும் ஒரே வேண்டுதல் நிறைவேறிவிட்டது என்று வாராகி தாயிடம் கூறுவது போல நாம் எழுதுவதன் மூலம் வாராஹிதாயின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும்.
முதல் நாள் காலையில் 9:00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்து விட்டு மறுநாள் நேரம் கிடைக்காதவர்கள் இரவு 9 மணிக்கு கூட இதை எழுதலாம். முடிந்த அளவிற்கு ஒரே நேரத்தை பின்பற்றுவது என்பது மிகவும் சிறப்பு. சரியாக 9:00 மணிக்கு 9 முறை வாராகி அம்மனை நினைத்து இந்த முறையில் வேண்டுதலை எழுதுபவருக்கு அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களைப் போக்கும் ஆஷாட நவராத்திரி தீபம்
மிகவும் எளிமையான இந்த பரிகார முறையை ஆஷாட நவராத்திரி சமயத்தில் முழு நம்பிக்கையுடன் வாராகி அம்மனை நினைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.