
தீராத கஷ்டங்கள் தீரவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும், ஆட்டி படைக்கும் கடன் தொல்லை ஒழியவும் விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வழிபட வேண்டும். இவரை வழிபடுபவர்களுக்கு இந்த மூன்று விதமான பிரச்சனைகளும் நொடியில் நீங்கும் என்பதை நம்பிக்கை. முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே, மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகிறது.
இதன்படி பிள்ளையாரை மஞ்சள் பிடித்து வைத்து வழிபட்ட பின்பே மற்ற பூஜைகளை துவங்குகின்றோம். அந்த வகையில் கடன்கள் தீருவதற்கு பிள்ளையாருக்கு எந்த உருவத்தை கொடுக்க வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? என்பது போன்ற சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து இப்பதிவில் காண இருக்கிறோம். எந்த தெய்வங்களுக்கும் உருவம் கொடுக்க கல், மண், மரம், செம்பு ஆகியவை தேவைப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் பிள்ளையாருக்கு மட்டும் உருவம் கொடுக்க மிகவும் எளிமையான பொருட்களால் முடியும். அப்படி ஒரு பொருள் வெண்ணெய்!
குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால், அதற்குரிய பலன்களை அடையலாம் என்பது நியதி. குங்குமத்தில் பிள்ளையார் செய்து வைத்தால் செவ்வாய் தோஷம் விலகுவதாக நம்பிக்கை உண்டு. அது போல வெல்லத்தில் பிள்ளையார் செய்து வைத்தால், உடம்பில் இருக்கக்கூடிய கட்டிகள், கொப்பளங்கள் மறையும். உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்தால் எதிரிகள் தொல்லை ஒழியும். இது போல ஒரு சில பொருட்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வைப்பதால் பலன்கள் வேறுபடுகிறது.
நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள்வது மட்டும் கடினமாகவே இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று என்று மாற்றி மாற்றி கடன் வாங்க வேண்டி இருக்கிறது என்று புலம்புபவர்கள், புதன் கிழமையில் வெண்ணெயை பிள்ளையார் பிடித்து வையுங்கள். சுத்தமான பசுவின் வெண்ணெயை வாங்கி வந்து அதில் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வையுங்கள். பின்னர் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள்.
வெண்ணையை அரச இலை, வாழை இலை போன்றவற்றின் மீது வைக்க வேண்டும். பின்பு பிள்ளையாருக்கு பிடித்த நைவேத்திய பிரசாதங்களை தயார் செய்யுங்கள். இட்லி, வடை, அவல், பொரி, மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம், வாழைப்பழம் போன்ற எளிமையான அன்ன பிரசாதங்களை தயார் செய்து வைத்து தாம்பூலம் வையுங்கள். வெற்றிலை, தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை தாம்பூழமாக வைத்து விநாயகரை வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
கீரை கூட்டு செய்முறை
விநாயகர் அஷ்டகம், விநாயகர் ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரங்கள், விநாயகர் போற்றிகள் என்று உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லி அந்த நாளில் கடன் தீர விநாயகரை வணங்கிக் கொள்ளுங்கள். வெண்ணெய் பிள்ளையாரை வழிபட்டால் கோடி கடன் இருந்தாலும், அது வெண்ணெய் போல உருகி கரையும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தும்பை பூ, சங்கு பூ, மாதுளை பூ, அரளிப்பூ போன்றவற்றைக் கொண்டு கடன் தீர வேண்டும் என்று 108 முறை இந்த பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். இப்படி வெண்ணெய் பிள்ளையாரை வழிபட்டால் எவ்வளவு கடன்கள் இருந்தாலும், அது சிறுக சிறுக குறைந்து, இனி கடன் வாங்காத நிலைக்கு பிள்ளையார் அருள் தருவார்.