
வீட்டில் தோட்டம் வைத்து இருப்பவர்கள் அது சிறிய அளவில் இருந்தாலும் சரி, அல்லது பெரிய அளவில் இருந்தாலும் சரி அதை செடிகள் வாங்கி வைக்கும் போது ஒரு ஆர்வமாக வாங்கி வைத்து விடுவோம். ஆனால் அதன் பிறகு அதை பராமரிக்க அதற்கு என்ன உரம் போட்டு வளர்க்கலாம் என்று தெரியாமல், சிலர் அதற்காக அடிக்கடி உரம் பூச்சிக் கொல்லி இதை போன்று வாங்குவதற்கு பெருமளவில் செலவு செய்து கொண்டே இருப்பார்கள். இனி அப்படி செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உரத்தை நாமே நம் வீட்டில் தேவை இல்லாமல் தூக்கி கிச்சன் போடும் கழிவை வைத்தே செய்து விடுவோம். இப்படி சொல்லும் போது நாம் எல்லோருக்கும் தெரிந்த டீ கம்போஸ் முறை கிடையாது. அது கூட நாம் அப்படி சேர்த்து வைக்கும் போது அதிலிருந்து ஒரு வித வாடை வர ஆரம்பிக்கும். அதன் பிறகு அதை வடிகட்டி செடிகளுக்கு உட்பட்டுவது சிலருக்கு பிடிக்காது. இது அப்படி கிடையாது இயற்கையான உரத்தை எப்படி நாமே தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.
உரம் தயாரிக்க முதலில் ஒரு பானை எடுத்துக்கொண்டு அதில் நான்கு துளைகளை போட்டுக் கொள்ளுங்கள். மிஷின் வைத்து துளைகள் போடுங்கள் கையால் உடைத்தால் பானை உடைந்து விடும். துளை போட்ட பிறகு முதலில் காய்ந்த இலைகளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களிடம் இருக்கும் மண் எந்த மண்ணாக இருந்தாலும் சரி அதை ஒரு லேயர் போட்டு விடுங்கள். அதற்கு மேல் கிச்சன் காய்கறி கழிவுகளை அதில் போட்டு விடுங்கள்.
மறுபடியும் அதன் மேல் இன்னொரு லேயர் காய்ந்த தழைகள் போட்டு கொள்ளுங்கள். அதன் மேல் மறுபடியும் மண் திரும்பவும் காய்கறி கழிவு இப்படி இரண்டு லேயர் முடிந்த பிறகு சிறிது பச்சை இலை தழைகளை போட்டு கொள்ளுங்கள். உங்கள் தோட்டத்தில் செடிகளுக்கு இடையில் வளர்ந்திருக்கும் தேவையற்ற செடிகளை இருக்கும் அல்லவா அதை கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். சேர்த்து பிறகு அதன் மேல் மணல் போட்டு காய்ந்த தழைகளை போட்டு மறுபடியும் கிச்சன் கழிவுகளையும் சேர்த்து விடுங்கள். இப்போது கடைசியாக மண் சேர்த்து விடுங்கள்.
இப்படி மூன்று லேயர் வரை இந்த கலவைகளை நன்றாக அழுத்தி அழுத்தி போடுங்கள். அப்போது தான் உரம் அதிக அளவில் கிடைக்கும் கடைசியாக அந்த மணலின் மீது சாணம், நாட்டு சர்க்கரை இரண்டையும் நன்றாக கலக்கி அதில் ஊற்றி ஒரு மூடி போட்டு வெயில் படாத இடத்தில் வைத்து விடுங்கள். 10 நாட்கள் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விடுங்கள்.
இடையில் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் காய்ந்து போனது போல் தெரிந்தால் மட்டும் கொஞ்சம் தண்ணீர் தெளிங்கள் இல்லை என்றால் வேண்டாம் அப்படியே விட்டு விட்டால் அனைத்து கழிவுகளும் நன்றாக மக்கி உங்களுக்கு இயற்கையான உரம் அதுவும் செலவே இல்லாமல் நீங்களே உங்கள் தோட்டத்திற்கு தயார் செய்து கொள்ள முடியும்.
இந்த உரம் பார்க்க உர மண் போல தான் இருக்கும். வெளியில் ரசாயனம் கலந்த உரங்களை காட்டிலும் இது போன்ற கழிவுகளை உங்கள் செடிகளுக்கு பயன்படுத்தும் போது அதிக அளவில் உங்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் அது மட்டும் இன்றி நாம் வீட்டில் டீ கம்போஸ்ட் செய்வதற்காக காய்கறிகள் கழிவுகள் அனைத்தையும் போட்டு வைக்கும் போது அதிலிருந்து ஒரு வித வாடை வரும். அதை பிடிக்காதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி உபயோகித்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: வெற்றிலை கொடி வளர்க்க ஆசையா இருக்கா? உங்க கிட்ட ஒரே ஒரு வெற்றிலை இருந்தா போதுங்க, அத வச்சி நீங்களே வெற்றிலை கொடியை ஈஸியா வளர்க்கலாம் வாங்க.
செடி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருமே இனி செடி வாடி விடும் என்ற கவலை இல்லாமல் ஆசை பட்ட செடிகளை வாங்கி வளர்க்கத் தொடங்குங்கள்.