வெற்றிலை கொடி வளர்க்க ஆசையா இருக்கா? உங்க கிட்ட ஒரே ஒரு வெற்றிலை இருந்தா போதுங்க, அத வச்சி நீங்களே வெற்றிலை கொடியை ஈஸியா வளர்க்கலாம் வாங்க.

- Advertisement -

வெற்றிலை கொடி சாதாரணமாக வளரக்கூடிய ஒன்று தான். இது அழகுக்காக மட்டும் இன்றி மருந்து மற்றும் பூஜை என அனைத்திற்கும் இந்த வெற்றிலை அதிக அளவில் பயன்படும். இந்த கொடி எல்லோர் வீட்டிலும் இருப்பது நல்லது தான். ஆனால் நர்சரியில் ஒரே ஒரு இலை மட்டும் தான் இருக்கும் அந்தச் கொடியே அத்தனை விலை சொல்வார்கள். நாம் யாராவது தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் அங்கு இந்த கொடிகளை பார்த்தால் ஆசையாக இருக்கும் கேட்டால் இது போன்ற செடிகளை அவர்கள் தர மாட்டார்கள். அதனால் நீங்கள் ஒரேயொரு இலையை மட்டும் கம்புடன் வாங்கி கொள்ளுங்கள் போதும். அதை வைத்தே நீங்க ஒரு வெற்றிலை கொடியை வளர்த்து விட முடியும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய பதிவுதான் இது.

இந்த முறைக்கு கண்டிப்பாக கடையில் வாங்கிய வெற்றிலையை பயன்படுத்த கூடாது. அதில் கம்பு இருக்காது அதுமட்டும் இன்றி இந்த முறையில் கோடி வளர்க்க இலையை பறித்தவுடன் நட்டு வைப்பது நல்லது.

- Advertisement -

முதலில் வெற்றிலை அதன் தண்டுடன் இருக்கும் படி பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு அல்லது நான்கு வெற்றிலை வரை இப்படி ஒரே தொட்டியில் நடலாம்.

ஒரு தொட்டி எடுத்து அதில் உர மண், தோட்ட மண் எதுவாக இருந்தாலும் அதை போட்டு கொள்ளுங்கள். இந்த மண் தொட்டியின் முக்கால் பாதம் வரும் வரை போட்டுக் கொள்ளுங்கள். தேங்காய் நார் கலந்த மண் அல்லது நீங்கள் ஏற்கனவே செடி வைத்த மண்ணாக இருந்தால் அதையும் கூட இதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மண்ணை நன்றாக கிளறி லூசாக இருக்கும் படி செய்த பிறகு, இந்த தண்டுடன் வெற்றிலைகளை நட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை வைத்த பிறகு வெயிலில் வைக்கக்கூடாது. நிழலியில் தான் வைத்து வளர்க்க வேண்டும் ஆனால் இது வளர ஒரு மாதம் ஆகும். அதுவரை நீங்கள் எந்த உரமும் மருந்து தெளிக்க வேண்டியதில்லை கொஞ்சமாக தண்ணீர் மட்டும் தெளித்து செடி வாடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.

ஒரு மாதம் கழித்த பிறகு இந்த இலைகளை எடுத்து இன்னொரு தொட்டி மாற்றி நட்டு வைத்து விடுங்கள். கண்டிப்பாக நாம் வேறு தொட்டிக்கு மாற்றி விட வேண்டும். ஏன் என்றால் இந்த மண்ணில் கொடி வளர நாம் எந்த ஒரு உரமும் போடவில்லை. எனவே கோடி வேர் விட்ட பிறகு வேறு தொட்டிக்கு மாற்றி வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க பூச்செடி எல்லாம் பூச்சி வச்சி வாடிருச்சா? கவலையை விடுங்க, பைசா செலவில்லமா ஒரே ஸ்பிரேவில் அத சரி பண்ணி பூக்க வச்சிடலாம்.

அதன் பிறகு இதற்கு நீங்கள் ஓரளவிற்கு வெயில் படும் படி இந்த தொட்டியை மாற்றி வைத்து, எப்போதும் போல் காய்கறி கழிவுகள், உரங்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து வளர்க்க தொடங்குங்கள்.

- Advertisement -