- Advertisement -

வாகனத்தை ஓட்டி செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறதா? 9 வாரம் முருகப்பெருமானுக்கு இந்த விளக்கு ஏற்றுங்கள். வரக்கூடிய விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

- Advertisement -

இன்றைக்கு இருக்கக்கூடிய நெரிசலான சூழலில், சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் சிரமம் இருக்கிறது. வாகனங்களை இயக்குவதிலேயே சிரமம், வண்டியை ஓட்டி செல்லும் போது சில பேருக்கு கவன குறைவின் மூலமாக விபத்து ஏற்படும். சில பேருக்கு காரணமே இல்லாமல் ஓட்டிக்கொண்டிருக்கும் இருகர வாகனத்திலிருந்து விழுந்து விபத்து ஏற்படும். சில பேருக்கு எதிரே வரக்கூடிய, வாகன ஓட்டுனர் செய்யக்கூடிய தவறின் மூலம் கூட விபத்து ஏற்படும். சில பேருக்கும் திடீரென வாகனம் பழுதடைந்த காரணத்தால் விபத்து ஏற்படலாம். இப்படி எதிர்பாராமல் நடக்கக்கூடிய விபத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரம் உள்ளது. அது என்ன பரிகாரம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

முருகப்பெருமானை முழு மனதோடு நம்பி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் எந்த முருகன் சன்னிதானம் இருக்க கூடிய கோவிலிலும் இந்த விளக்கை ஏற்றலாம். ஒன்பது வார வெள்ளிக்கிழமை இந்த விளக்கை தொடர்ந்து ஏற்ற வேண்டும். ஆண்கள் பெண்கள் இருப்பாளரும் இந்த விளக்கை ஏற்றுலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலம் வரும்போது அந்த வாரத்தை தவிர்த்து விட்டு அடுத்த வாரம் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முருக பெருமானுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை வாங்கிச் செல்ல வேண்டும். செவ்வரளி, செம்பருத்தி, சிவப்பு ரோஜா, இப்படி எதை வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளலாம். அதை முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனதார விபத்து நடக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை காலை, மாலை உங்கள் சௌகரியம் போல எந்த நேரம் முடியுமோ அந்த நேரம் ஏற்றுங்கள். இதை செய்தால் வாகன விபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வாகன விபத்து குறையும். சில பேருக்கு ஜாதகரீதியாகவே விபத்து ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு கூட பலன் கொடுக்கக் கூடிய பரிகாரம் தான் இது.

- Advertisement -

விபத்து ஏற்படுவதில் இன்னொரு ரகமும் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு துர்சக்தியின் நடமாட்டம் எந்நேரமும் எல்லா இடத்திலும் இருக்கின்றது. அதனுடைய தாக்கத்தின் மூலமாக கூட வண்டியில் செல்பவர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள். நிறைய பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருப்போம். நான் சரியாகத்தான் வண்டியை ஓட்டி சென்றேன். ஏதோ ஒன்று என்னை இழுத்து கீழே தள்ளிவிட்டது என்று. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் ஒரு வழி உள்ளது.

ஒரு சிறிய மஞ்சள் துணியில், கொஞ்சமாக கருப்பு உப்பு, கருப்பு எள்ளு, ஒரு கரித்துண்டு, ஒரு இரும்பு ஆணி, இந்த பொருட்களை எல்லாம் வைத்து சிறிய முடிச்சு போட்டு உங்களுடைய வண்டியில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இரு சக்கர வாகனமாக இருந்தாலும், நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் இந்த முடிச்சு இருக்கும் பட்சத்தில் கெட்ட சக்தியின் மூலமாக விபத்து ஏற்படாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -