
வருகின்ற 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதாவது நாளை மறுநாள் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி வரவிருக்கின்றது. சனிக்கிழமை தொடங்கிய இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தொடர்ந்து பத்து நாட்கள் தவறாமல், பின் சொல்லக்கூடிய முறைப்படி, விநாயகரை வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வீட்டில் வறுமை நெருங்குவதற்கு வாய்ப்பே கிடையாது.
வீட்டில் இருக்கும் வறுமையும், வீட்டை விட்டு தொலைதூரம் ஓடிவிடும். செல்வக் கடாட்சம் உங்களுக்கு நிறைவாக கிடைக்கப்பெறும். அப்படிப்பட்ட விநாயகர் வழிபாட்டை சிரமப்பட்டு செய்ய வேண்டுமா. சிரமம் எல்லாம் வேண்டாம். மிக மிக எளிமையான முறை இருக்கிறது. அதைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
7.9.2024 ஆம் தேதி முதல் 17.9.2024 ஆம் தேதி வரை இந்த வழிபாடு உங்கள் வீட்டில் செய்யப்பட வேண்டும். நீங்கள் வாங்கி வைத்த மண் பிள்ளையாருக்கு இந்த வழிபாட்டை செய்தாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையார் சிலை, பிள்ளையாரின் திரு உருவப்படத்திற்கு இந்த வழிபாட்டை செய்தாலும் சரி. பிள்ளையாரின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
முடிந்தால் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பஞ்சபூதங்களின் வடிவாக இருக்கும் விநாயகரிடம் வரங்களை கேட்கும் போது நம்முடைய வரம் எளிமையாக கிடைக்கும் அதற்காகத்தான்.
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு சிவப்பு நிற புது வஸ்திரம் வாங்கி கட்டி விடுங்கள். மண் பிள்ளையார் வாங்கினாலும் அதற்கு கட்டலாம், அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையார் சிலைக்கும் அந்த சிவப்பு நிற வஸ்திரம் கட்டி வைக்கலாம். அந்த பிள்ளையார் திரு உருவப்படத்திற்கு மேலே அந்த வஸ்திரத்தை போட்டு விடுங்கள்.
பிள்ளையாருக்கு தினமும் சிவப்பு பூ வைக்க வேண்டும். பிள்ளையாருடைய தலைமேல் 21 என்ற கணக்கில் அருகம் புல்லை வைக்க வேண்டும். ஒவ்வொரு அருகம்புல்ளாக எண்ணிக் கொள்ளுங்கள். தினமும் பிள்ளையாரை இப்படி அலங்காரம் செய்துவிட்டு, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பிள்ளையாருக்கு ஒரு பொறி உருண்டையோ, அல்லது பொட்டுக்கடலை அவல், பொறி நெய்வேத்தியம் வைத்து, தினமும் உங்களுடைய வேண்டுதலைப் பிள்ளையாரிடம் சொல்ல வேண்டும்.
இந்த 10 நாட்களும் மேல் சொன்ன முறையில் பிள்ளையாரை அலங்காரம் செய்து ஒரு விளக்கு ஏற்றி பிள்ளையாரிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்தால், 10 நாட்களுக்குள் நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேறும். பூக்கள் அருகம்புல் இவைகளை எல்லாம் தினம்தோறும் மாற்ற வேண்டும். ஒரே ஒரு சிவப்பு நிற வஸ்திரம் வாங்கினால் போதும். அதையே தினமும் விநாயகருக்கு உடுத்தலாம் தவறு கிடையாது. தினமும் புதுப்புது நெய்வேதியம் வைக்கலாம். அதிலும் தவறு கிடையாது.
ஆனால் தினமும் புதுசாக அருகம்புல், புதுசாக சிவப்பு நிற பூ போட வேண்டும். செம்பருத்தி பூ, செவ்வரளி பூ சிவப்பு ரோஜா, எது வேண்டும் என்றாலும் வைக்கலாம். இதேபோல இந்த பத்து நாட்களும் விநாயகர் வழிபாடு செய்துவிட்டு நீங்கள் வைத்து வழிபாடு செய்து மண் பிள்ளையாராக இருந்தால் கொண்டு போய் தண்ணீரில் சேர்த்து விடுங்கள்.
உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்த பிள்ளை யாருக்கு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அதை அப்படியே விட்டு விடலாம். விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து பத்து நாள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவப்பு நிறம் விநாயகருக்கு உகந்த நிறம். இது உங்களுடைய வறுமையை, போக்கக்கூடிய நிறமாகவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்க
நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்யுங்கள். நீண்ட நாள் நிறைவேறாத ஆசை கனவு லட்சியம் எல்லாம் நிறைவேறுவதற்கு இந்த எளிய ஆன்மீகம் வழிபாடு உங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டி தரும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.