- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்க

வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்க

- Advertisement -

நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தை நினைத்து, அந்த பொருள் எனக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டி, மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதை விட, நமக்கு மகாலட்சுமி தாயார் கொடுத்த பொருட்களுக்கு நன்றி சொன்னாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் வராது. ஆனால் மனிதனுடைய இயல்பு என்ன. இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததை தேடுவது தானே.

அதைத்தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம். என்றைக்காவது இருக்கும் பொருளை மதித்து நம் வீட்டில் இருக்கும் பொருளுக்கு நன்றி தெரிவித்து, நமக்கு நல்லது செய்யும் கடவுளுக்கு மகிழ்ச்சி உடன் நன்றியை தெரிவித்து இருப்போமா. இந்த தவறை இனி திருத்திக் கொள்வோம். நம்முடைய வீட்டில் எந்தெந்த பொருட்களுக்கு நன்றி செலுத்த வேண்டும், எந்தெந்த பொருட்களை உதாசீனப்படுத்தாமல் இருக்க வேண்டும், என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்போது தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நம்முடைய வீட்டில் சுலபமாக கிடைக்கக்கூடிய பொருள் என்றால் நீர். இந்த தண்ணீர் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையே கிடையாது. நம்முடைய உடம்பும் முக்கால் பாகம் தண்ணீரில் இருக்கிறது. நம்முடைய உலகமும் முக்கால் பாகம் தண்ணீர் இருக்கிறது. தினம் தினம் நம் உயிர் வாழ தேவையான தண்ணீரை வணங்க வேண்டும். இதுநாள் வரை தண்ணீரை அனாவசியமாக செலவு செய்திருந்தாலோ, உதாசீனப்படுத்தினாலோ என்னை மன்னித்துவிடு என்று தண்ணீரிடமும் மகாலட்சுமி இடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். தண்ணீருக்கு நன்றி தெரிவியுங்கள்.

அடுத்தபடியாக துடைப்பம். மகாலட்சுமி வாழக்கூடிய பொருட்களில் துடைப்பமும் ஒன்று. துடைப்பம் இல்லை என்றால் நம் வீடு சுத்தமாகாது மகாலட்சுமி. வைகுண்டம் சென்றபோது தன்னுடைய கையில் துடைப்பத்தை எடுத்துச் சென்றால் மகாலட்சுமி என்ற ஒரு கருத்தும் நம்முடைய சாஸ்திரத்தில் இருக்கிறது. தினமும் வீடு கூட்டிய பிறகு துடைப்பத்திற்கு நன்றி சொல்லி அந்த துடைப்பத்தை பத்திரப்படுத்தி யார் கண்களுக்கும் தெரியாமல் மறைத்து வைத்தாலே நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் வராது.

- Advertisement -

மூன்றாவதாக சொல்லப்படுவது கண்ணாடி. நம்மை அழகுப்படுத்திக் கொள்ள நமக்கு உதவும் பொருள் கண்ணாடி. கண்ணாடி இல்லை என்றால் நம்முடைய நிலையை நம்மால் சீர் செய்து கொள்ளவே முடியாது. நம்மை நாம் அழகாக மாற்றிக்கொள்ள முடியாது. கண்ணாடிக்கு என்றாவது நன்றி சொல்லி இருக்கின்றோமா. நாளை வெள்ளிக்கிழமை நாளை உங்களை நீங்களே அழகுப்படுத்திக் கொண்டு அந்த கண்ணாடிக்கு நன்றி தெரிவியுங்கள்.

தினம் தினம் நமக்கு சாப்பாடு கொடுக்கும் தெய்வம் அடுப்பங்கரை. அந்த அடுப்பு அதுதான் ஸ்டவ், தினமும் அந்த அன்னபூரணி தாய்க்கு, அந்த கேஸ் ஸ்டவ்வுக்கு நன்றியை சொல்லுங்கள். இப்படி செய்தாலே போதும் உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் மேலும் மேலும் அதிகரிக்கும்.

- Advertisement -

நன்றி தெரிவிக்கும் மந்திரம்.

ஓம் ஸ்ரீ மாத்திரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னபூரணாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!

தினமும் ஒரு முறையேனும் மகாலட்சுமியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். முதலில் அன்னைக்கு வணக்கம் தெரிகின்றோம். நம்முடைய தாய்க்கு. இரண்டாவது சாப்பாடு. பூமி மாதா நமக்கு சாப்பாடை கொடுக்கவில்லை என்றால் நம்மால் உயிர் வாழ முடியாது அதற்கும் ஒரு நன்றி. கிரைண்டர், மிக்ஸி, சோபா, சேர், வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஏசி என்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வசதியை கொடுத்ததற்கும் நன்றி.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

இவை அனைத்தும் மகாலட்சுமி நமக்காக கொடுத்த வரம் தான். இதற்கெல்லாம் என்றைக்காவது நன்றி உணர்வோடு நடந்து கொண்டிருக்கின்றோமா. எப்போதுமே அவளை திட்டிக் கொண்டே இருப்போம். இனி அப்படி செய்யாதீங்க. நாளை வெள்ளிக்கிழமை. நாளை பூஜை செய்யும்போது மகாலட்சுமிக்கு நன்றி தெரிவியுங்கள். உங்களுக்கு இன்னும் லட்சுமி தேவி வாரி வாரி கொடுத்துக் கொண்டே இருப்பாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்