- Advertisement -

அற்புதமான ஆற்றல் கொண்ட தெய்வங்களின் வரிசையில் விநாயகப் பெருமான் என்பவர் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறார். காரிய தடை என்று கூறக்கூடிய எதுவாக இருந்தாலும் அது அனைத்தையும் நீக்கக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய தலையெழுத்து மாறும் என்றும் நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகர் வழிபாடு

எவ்வளவு கஷ்டங்களை நம்முடைய விதிப்படி நாம் அனுபவித்தாலும் அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் நம் விதியை நம் மாற்ற வேண்டும் என்றால் நாம் விநாயகர் பெருமானை சரணாகதி அடைய வேண்டும். யார் ஒருவர் விநாயகப் பெருமானை சரணாகதி அடைந்து அவரை முழுமனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய தலையெழுத்து மாறும் என்று கூறப்படுகிறது. எதை நினைத்து விநாயகப் பெருமானை நாம் வழிபடுகிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது பலரும் அனுபவபூர்வமாக அறிந்த உண்மை. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நம் விதியை மாற்றுவதற்கு எப்படி வழிபடலாம் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை விநாயகப் பெருமானுக்கு உகந்த கிழமையான திங்கட்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு தான் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். முதல் நாளில் இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டை பாக்கு, இரண்டு வாழைப்பழம், உதிரிப் பூக்கள், அருகம்புல் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

திங்கட்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் முடிந்தவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சென்று வழிபடலாம். முடியாதவர்கள் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அந்த நேரமும் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் தங்களால் இயன்ற நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதிக பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தையும் காலை 6:00 மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளும் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு.

- Advertisement -

அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகர் ஆலயத்திற்கு சென்று அவருடைய பாதத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், உதிரி பூக்கள், அருகம்புல் இவற்றை வைத்து விடுங்கள். விநாயகப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பூவான செம்பருத்திப்பூ கிடைத்தால் அந்த செம்பருத்திப் பூவையும் ஐந்து எண்ணிக்கையில் பறித்து வந்து விநாயகரின் ஐந்து கரங்களில் வைக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான தோப்புக்கரணத்தை உங்களால் இயன்ற அளவு போட வேண்டும். அடுத்ததாக பிள்ளையார் கொட்டு கொட்டிக் கொண்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார விநாயகப் பெருமானிடம் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்து விட்டு விநாயகப் பெருமானை வலம் வர வேண்டும். அதாவது சுற்றிவர வேண்டும்.

- Advertisement -

குறைந்தபட்சம் ஏழு எண்ணிக்கையில் சுற்ற வேண்டும். அதிகபட்சம் 108 எண்ணிக்கை வரை சுற்றலாம். இதில் உங்களால் எத்தனை முறை சுற்ற முடியுமோ அத்தனை முறை மனதார விநாயகப் பெருமானின் நாமத்தை கூறியவாறு நிறுத்தி நிதானமாக அவசரம் இல்லாமல் சுற்றி வந்து அவரை வழிப்பட வேண்டும். இப்படி தொடர்ந்து ஐந்து வாரங்கள் விநாயகர் பெருமானை வழிபடுபவர்களுக்கு அவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதோடு அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:செல்வ வளம் பெருக அரச மர வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கை வைத்து விநாயகப் பெருமானை வழிபட்டு தங்களுக்கு விதித்த விதியை மாற்றி எழுதி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -