- Advertisement -

கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியது

- Advertisement -

கந்தனுக்கு அரோகரா. முருகனுக்கு அரோகரா. முருகப்பெருமானுக்கு உரிய தினமான கந்த சஷ்டி விரதம் துவங்கிவிட்டது. ஆனால் எல்லோராலும் நோன்பு இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாது. சில பேருக்கு சூழ்நிலை சரியாக கை கொடுக்காது. விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்வது. பின் சொல்லக்கூடிய இந்த எளிமையான விஷயங்களில் உங்களால் முடிந்த ஒரு விஷயத்தை செய்யுங்கள், முடிந்த ஒரு பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் அந்த கந்தன் கருணை உங்களுக்கு கிடைக்கும்.

சஷ்டி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் என்ன செய்யலாம்

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, முருகா முருகா என்று மனம் உருகி கூப்பிட்டாலே முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு கிடைத்துவிடும். இதோடு பூஜை அறையில் முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு நெய் விளக்கு அல்லது அகல் விளக்கு ஏற்றி ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை ஆறு முறை சொல்லுங்கள். இது முதல் வழிபாடு. வீட்டில் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விடுங்கள்.

- Advertisement -

கந்த சஷ்டி விரத நாட்களில் 36 முறை, கந்த சஷ்டி கவசம் படித்தால், உங்களுடைய எவ்வளவு பெரிய கோரிக்கையும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த கலியுகத்தில் இது சாத்தியமில்லை எல்லோராலும், இப்படி 36 முறை சஷ்டி கவசம் படிக்க முடியாது இருந்தாலும் ஒரு முறையாவது வீட்டில் சஷ்டி கவசத்தை ஒலிக்க விடுவோம். கடுமையான விரதம் என்றால் காலை 12 முறை, மதியம் 12 முறை, மாலை 12 முறை சஷ்டி கவசம் படிப்பது தான்.

இரண்டாவது, வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லலாம். காலை அல்லது மாலை உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, சென்று அந்த முருகனை 6 முறை வலம் வரலாம். முருகன் கோவிலில் இந்த 7 நாட்களும் விமர்சியாக திருவிழா நடக்கும். அந்த முருகனுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கித் தருவது, கோவிலில் சின்ன சின்ன வேலைகள் பார்ப்பது, கோவிலை சுத்தம் செய்வது, இது போன்ற உழவாரப் பணிகளை செய்யும்போது முருகன் அருளை பெற முடியும்.

- Advertisement -

எத்தனையோ முருக பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதம் மேற்கொள்வார்கள். அப்படி விரதம் இருக்கும் முருக பக்தர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அவர்களுக்கு சின்னதாக வேல் வாங்கி கொடுக்கலாம். பச்சை நிற ஆடை வாங்கி தானம் கொடுக்கலாம். ஒரு முருக பக்தரை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டால் அத்தனை புண்ணியம்.

அதுவும் இந்த சஷ்டி விரதத்தில் ஒரு முருக பக்தரை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவர் என்ன சாப்பிடுவாரோ, அந்த உணவை அவருக்கு கொடுத்தீர்கள் என்றால், ரொம்ப ரொம்ப புண்ணியம். விரதம் மேற்கொள்ளாத எத்தனையோ முருகன் பக்தர்கள் இருக்கிறார்கள் இருப்பவர்கள். அவர்களுக்கு ஒரு வாய் சாப்பாடு போடுங்க. உங்களால் முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு ஒருவருக்கேனும் அன்னதானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி வேல் வழிபாடு

இந்த கந்த சஷ்டி விரத நாட்களில் முருகா, கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அவனுடைய நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் உங்கள் மனதில் முருகனை அமர வைத்து அழகு பாருங்கள். வேலை சுமை காரணமாக, அலுவலகப் பணி காரணமாக, வியாபாரம் காரணமாக, எங்களால் விரதம் இருக்க முடியவில்லை என்பவர்கள் இந்த 7 நாட்களில் மேல் சொன்ன விஷயத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை செய்தாலும், முருகன் அருள் ஆசிரியை பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -