
விஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம். வருடத்தில் நான்கு நாட்கள் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம் வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. இதன் அடிப்படையில் பார்த்தால் நாளை வைகாசி 1. வியாழக்கிழமையோடு இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் சேர்ந்து வந்திருப்பது சிறப்பு. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் பாவ கணக்குகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாவக்கணக்கு குறையும் பட்சத்தில் புண்ணியம் தானாக சேர துவங்கிவிடும்.
புண்ணியம் தானாக சேர துவங்கும்போது பணம் காசும் சேர துவங்கிவிடும். பாவம் குறையும் போது கடனும் அதிவிரைவாக குறைவதை நீங்கள் உணரலாம். இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்டு வந்திருக்கும் இந்த விஷ்ணு பதி புண்ணிய கால நேரம் நாளை எப்போது வருகிறது. பெருமாளை எந்த நேரத்தில், எந்த முறையில் வழிபாடு செய்வது, எந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்வது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நாளை 15-05-2025 வைகாசி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம். நாளை இரவு 1:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கிறது. ஆனால் நடு இரவில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள முடியாது. கோவில்கள் சாத்தப்பட்டு இருக்கும்.
ஆகவே நாளைய தினம் காலை 5:00 மணியிலிருந்து 10:00 மணிக்கு முன்பாக விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டை பெருமாள் கோவிலில் செய்யலாம். கொடிமரம் இருக்கும் பெருமாள் கோவிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கொடிமரத்தோடு சேர்த்து பெருமாளை வளம் வரும்போதுதான், நமக்கு முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது 27 உதிரி பூக்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பெருமாளை 27 முறை வலம் வரும்போது கணக்கு வைத்துக் கொள்வதற்காகத்தான் இந்த பூ. எந்த நிறத்தில் இருக்கும் பூக்களை வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். பெருமாள் கோவிலை வலம் வரும்போது விஷ்ணு பகவானின் மந்திரங்களை தான் உங்களுடைய வாய் உச்சரிக்க வேண்டும்.
மனது முழுக்க பெருமாள்தான் நிறைந்திருக்க வேண்டும். கணக்கில் மட்டுமே எண்ணங்கள் சிதறக்கூடாது. ஆகவே, பெருமாள் கோவிலை ஒருமுறை வலம் வந்துவிட்டு, கொடிமரத்திற்கு கீழே ஒரு பூவை வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு பூவாக வைக்கும் போது 27 சுற்று நிறைவடையும்போது, கையில் இருக்கும் பூ முடிந்திருக்கும். 27 சுற்று நிறைவடைந்து விட்டது என்பது அர்த்தம்.
பெருமாளை 27 முறை சுற்றி வந்து விட்டு, பெருமாளுக்கு துளசி இலைகளை சாற்றி, வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். சரி, பெருமாள் கோவிலை வலம் வரும்போது நம்முடைய பாவங்கள் நீங்க என்ன மந்திரம் சொல்லுவது.
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம்
ராம நாம வராணனே!
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் படிப்பது சிறப்பு. ஆனால் பெருமாளின் 1008 நாமத்தை அவ்வளவு சுலபமாக எல்லோராலும் படித்து விட முடியாது. அதற்கெல்லாம் ஒரு பாக்கியம் தேவை. ஆனால் இந்த நான்கு வரி மந்திரத்தை படித்தாலும் விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுமையாக படித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். ஆக நாளைய தினம் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தேவைப்படுபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் பெறுங்கள்.
ஓம் அனிருத்ரனே நமஹ !
காரிய தடையில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஸ்ரீதர ஸ்ரீஷ ஸ்ரீநிவாஸ் ஸ்ரீநிதிஹ்
ஸ்ரீ விபாவனஹ் ஸ்ரீதரஹ் ஸ்ரீகரஹ்
ஸ்ரேயஹ் ஸ்ரீமான் லோகத்ரயாஸ்ரயஹ்.
பொருளாதாரத்தில் ரொம்பவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெற வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை எல்லாம் எங்களுக்கு உச்சரிக்க முடியாது என்பவர்கள் கோவிலை வலம் வரும்போது கோவிந்தா, நாராயணா, கோபாலா, ஸ்ரீதரா, என்று பெருமாளின் இப்படிப்பட்ட நாமங்களை உச்சரித்தும் வழிபாட்டை மேற்கொள்ளலாம். “ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை சொல்லியும் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: தோஷங்களை நீக்கும் சித்திரை கடைசி நாள் பரிகாரம்
மந்திரத்தை உச்சரிப்பது இரண்டாவது பட்சம். உங்களுக்கு இந்த வழிபாட்டில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று பாருங்கள். முழு நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய வேண்டுதல் கூடிய விரைவில் பலிக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.