- Advertisement -

ஆவணி ஒன்று விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

- Advertisement -

மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்று பல நாட்கள் இருந்தாலும் வருடத்தில் வரக்கூடிய நான்கு மாதங்களின் முதல் நாள் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. அந்த நாளை தான் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று கூறுகிறோம். அது வைகாசி முதல் நாள், ஆவணி முதல் நாள், கார்த்திகை முதல் நாள் மற்றும் மாசி முதல் நாள். இந்த நான்கு நாட்களிலும் தவறாமல் மகாவிஷ்ணுவை யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய நியாயமான வேண்டுதல் நிறைவேறும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

காக்கும் கடவுளாக திகழக்கூடியவர் மகாவிஷ்ணு என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட காக்கும் கடவுள் நம்முடைய நியாயமான வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தான் மகாவிஷ்ணுவிடம் நாம் வைக்கும் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலும் ஆலயத்திலும் எப்படி வழிபாடு செய்யலாம் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை காலை 10:30 மணிக்குள் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது மகாவிஷ்ணுவிற்கு துளசி மாலையும், வெள்ளை நிற வாசனை மிகுந்த மலர்கள் 27 என்ற எண்ணிக்கையிலும், 27 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் கொடி மரத்தை வழிபாடு செய்து விட்டு கருடாழ்வாரை வணங்க வேண்டும். பிறகு நேராக மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து அவருக்கு துளசி மாலை கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு ஆலயத்தை வலம் வர வேண்டும்.

ஒவ்வொருமுறை வலம் வந்த பிறகு ஒவ்வொரு வெள்ளை மலர்களாக கொடி மரத்தில் வைக்க வேண்டும். அதேபோல் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை உண்டியலில் சேர்க்க வேண்டும். இப்படி 27 முறை சுற்றி வரும்போது 27 நாணயங்களை உண்டியலில் சேர்ப்பதோடு 27 மலர்களையும் கொடி மரத்தில் வைக்க வேண்டும். இப்படி வலம் வந்த பிறகு ஆலயத்திலேயே ஒரு ஓரமாக அமர்ந்து மிகவும் சக்தி வாய்ந்த இந்த மகாவிஷ்ணுவின் மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்துவிட்டு நம்முடைய நியாயமான வேண்டுதலை மகாவிஷ்ணுவின் திரு பாதங்களில் வைத்து மனதார வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு வர வேண்டும்.

- Advertisement -

வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் காலை 10:30 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சாட்சிக் கொள்ளுங்கள். இதே 27 ஒரு ரூபாய் மற்றும் 27 வெள்ளை மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். பின்வரும் இந்த மந்திரத்தை ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் ஒவ்வொரு மலர்களாக பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கடைசியாக இந்த 27 ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் நிற துணியில் கட்டி மூட்டையாக கட்டி பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். பிறகு உங்களுடைய வேண்டுதலை பெருமாளிடம் முன்வைத்து கற்பூர தீபத்தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறியதும் இந்த 27 ரூபாய் நாணயங்களை பெருமாளின் ஆலய உண்டியலில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

மந்திரம்

” லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் சுதர்சனம் “

இதையும் படிக்கலாமே: அதிகம் சம்பாதிக்க வழி

மகாவிஷ்ணுவின் அருளை பெறுவதற்கு உகந்த நாட்களான ஆவணி ஒன்றாம் தேதி முழுமனதோடு மகாவிஷ்ணுவை நினைத்து இப்படி வழிபாடு செய்ய நம்முடைய நியாயமான வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -