- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வீட்டில் ஆபரணங்கள் சேர்க்க உதவும் வழிபாடு

பூமியில் யாகம் மேற்கொள்ள நினைத்த ஈசன் தன் கழுத்தில் உள்ள பாம்பை பூமிக்கு அனுப்பி யாகத்திற்கான இடத்தை தேர்வு செய்து வரும்படி  கூறினார். இந்த பூமியில் மொத்தம் ஐந்து இடங்களை சிவனின் யாகத்திற்காக  நாகம் தேர்வுசெய்தது என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

  1. காளஹஸ்தி
  2. காட்டாங் குளத்தூர்
  3. திருநாகேஸ்வரம்
  4. திருப்பாம்புரம்
  5. கீழப்பெரும் பள்ளம்

இந்த ஐந்து  தலங்களில் ஒன்றான காட்டாங்குளத்தூரில் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஐயன் காளத்தீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியதாகவும் அகத்தியரால் அது பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக சிவனை நேருக்கு நேர் நின்று வணக்கம் சக்தி நந்தி தேவருக்கே உண்டு. அனால் இங்குள்ள சிவனுக்கு அளவற்ற சக்தி உள்ளதால் நந்தி தேவரும் கூட இங்கு சிவனை நேராகப் பார்த்து வழிபடாமல் சுவரில்  உள்ள ஒரு துவாரத்தின் வழியாகவே தரிசிக்கிறார். இங்குள்ள நந்தி பகவான் ஆபரண நந்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

ஆபரண நந்தி பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஆபரணங்கள் சேர அவர் அருள்புரிவார் என்பது நம்பிக்கை. ஆகையால் ஆபரணம் சேர்க்க விரும்புவோம் இங்குள்ள நந்திதேவரை மனதார பிராத்தியுங்கள். உங்கள் வீட்டில் ஆபரணம் சேர்ப்பதற்கான வழியை அவர் காண்பிப்பார்.

- Advertisement -
Published by