- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

காடு போன்று அடர்த்தியான கருமையான கூந்தலை பெற

- Advertisement -

இன்றைய காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதற்கொண்டு இளநரை பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்கிறது. மேலும் அவர்கள் தங்களுடைய கூந்தலை முழுமையாக பராமரிக்காததால் பொடுகு, பேன் போன்ற பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இதை சரி செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி எதனால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை கேட்டு அதை சரி செய்வதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். அதோடு சேர்த்து இந்த ஒரு எண்ணையையும் பயன்படுத்தி வந்தால் அவர்களுடைய பொடுகு பேன் இளநரை போன்ற பிரச்சனை அனைத்தும் நீங்கி அடர்த்தியான கருமையான கூந்தலை பெற முடியும். அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இளநரை மட்டுமல்லாமல் பொடுகு, பேன் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், முடி உதிர்தலால் கஷ்டப்படுபவர்களும், முடி வளரவே இல்லை என்று வருத்தப்படுபவர்களும் இந்த எண்ணையை வீட்டிலேயே தயார் செய்து உபயோகப்படுத்தலாம். இந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு என்று எதுவுமே கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு தலைக்கு குளித்து விட்டால் போதும். தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் படிப்படியாக நீங்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான எண்ணையை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் தேவைப்படும். ஒன்று பெரிய நெல்லிக்காய், மற்றொன்று கற்றாழை, மூன்றாவதாக தேங்காய் எண்ணெய். முதலில் பெரிய நெல்லிக்காயை வாங்கி வந்து தண்ணீரில் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் இருக்கக்கூடிய கொட்டையை மட்டும் நீக்கிவிட்டு மீதம் இருக்கக்கூடிய சதை பகுதிகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணிர் சேர்க்காமல் நன்றாக நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதே போல் கற்றாழையை செடியில் இருந்து பறித்த பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு மஞ்சள் நிற திரவம் வெளியே வரும். பிறகு அதை நன்றாக சுத்தமாக கழுவி அதில் இருக்கக்கூடிய சதை பகுதியை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதையும் நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காயும் கற்றாழையும் அரைத்த பிறகு சரிசமமாக இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் நெல்லிக்காயும் கற்றழையும் எடுத்து இருக்கிறோமோ அதை போல் இரண்டு மடங்கு அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வர் அல்லது இரும்பு கடாயை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது முதலில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்க்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்திருக்கும் கற்றாழையை சேர்க்க வேண்டும். மூன்றாவதாக நாம் எடுத்து வைத்திருக்கும் எண்ணெயில் பாதி அளவை மட்டும் சேர்க்க வேண்டும். இதை குறைந்த தீயில் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். சலசலப்பு முற்றிலும் நீங்கி எண்ணெய் தனியாக பிரிய ஆரம்பிக்கும். அந்த சூழ்நிலையில் மீதம் இருக்கக்கூடிய தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து மறுபடியும் கலந்து விட வேண்டும்.

நெல்லிக்காயின் நிறம் முற்றிலும் சிவந்து வரும் வரை அடுப்பிலேயே வைத்திருங்கள். அனைத்தும் நன்றாக சிவந்து எண்ணையின் நிறம் மாறிய பிறகு இதில் இரண்டு வெற்றிலை ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை போட்டு அடுப்பை உடனே ஆப் செய்து விட வேண்டும். பிறகு இதை ஆற வைத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த எண்ணெயுடன் 25 எம்எல் வரை விளக்கெண்ணையை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய மேஜிக் எண்ணெய் தயாராகி விட்டது.

- Advertisement -

என்றைக்கு நாம் தலைக்கு குளிக்கிறோமோ அன்றைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக நம்முடைய தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்து பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி குளித்து வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: முழு நிலவு போல் பிரகாசமான முகத்தை பெற

இந்த முறையில் எண்ணெய் தயார் செய்து நம்முடைய தலையில் தேய்ப்பதன் மூலம் இளநரை பிரச்சினை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் பொடுகு, பேன் போன்ற தொல்லைகளும், முடி உதிர்தல் பிரச்சனையும் படிப்படியாக குறைந்து அடர்த்தியான கருமையான கூந்தலை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -