
இளமையாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய சருமம் எந்தவித சுருக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும். 50 வயது ஆனாலும் 30 வயது போல தெரிபவர்களை தான் இளமையாக இருக்கிறார்கள் என்று கூறுவோம். ஆனால் இன்றைய காலத்தில் 30 வயதில் இருப்பவர்கள் கூட 50 வயது ஆன முதியவர் போல் காட்சியளிக்கிறார்கள். இதற்கு அவர்களுடைய சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களும் கருமையுமே காரணமாக திகழ்கிறது. இதை போக்குவதற்கு உதவக்கூடிய ஒரு மூலிகை பொடியை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
எவ்வளவுதான் நாம் கடைகளில் விற்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக் உபயோகப்படுத்தினாலும் அது வெளிப்புற அழகை மட்டுமே மேம்படுத்தும். ஆனால் நாம் உள்புறமாகவும் சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டோம் என்றால்தான் அதன் விளைவாக நம்முடைய அழகு என்பது நிரந்தரமாக இருக்கும். அந்த வகையில் பலரும் இன்றைய காலத்தில் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். தண்ணீர் குடிக்காமல் இருப்பதன் மூலம் விரைவிலேயே சருமத்தில் வறட்சி ஏற்பட்டு முதுமை தோற்றம் என்பது ஏற்படும். அதனால் அன்றாடம் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு சேர்த்து கெமிக்கல் அற்ற நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த கிழங்கு வகைகளை தினமும் நம்முடைய முகத்தில் தடவி குளிப்பதன் மூலம் இளமையாகவும் பொலிவாகவும் திகழ முடியும்.
இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது கஸ்தூரநீங்கும், பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு. இவை மூன்றையும் சரிசமமான அளவு வாங்கி வந்து நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியில் நம்முடைய சருமத்திற்கு தேவையான அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகம் கழுத்து கைகளில் நன்றாக தடவி அது உலர்ந்த பிறகு குளிக்கச் செல்ல வேண்டும்.
இப்படி தினமும் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் என்பது நீங்கும். மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நீராவியால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் முகத்துவாரங்களில் இருக்கக்கூடிய அழுக்குகளும் நீங்க ஆரம்பிக்கும். இதோடு மட்டுமல்லாமல் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த ஒரு எண்ணையை வைத்து நம்முடைய முகத்தை நாம் மசாஜ் செய்து விட்டு படுத்து உறங்கினோம் என்றால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பொலிவு நம்முடைய முகம் என்றும் பொலிவாக இருக்கும். வயதானாலும் நம்முடைய அழகு குறையவே குறையாது.
அந்த எண்ணையை தயார் செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும். ஆலிவ் எண்ணெய் 100 எம் எல் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கருஞ்சீரகம் 50 கிராமை போட்டு நன்றாக காய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு இதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பிறகு இதனுடன் ஒரு கிராம் அளவிற்கு குங்குமப்பூவை போட்டு மூடி வைத்து விடுங்கள். அவ்வளவுதான் எண்ணெய் தயாராகிவிட்டது.
தினமும் இரவு படுக்கச் செல்லும் பொழுது இந்த எண்ணெயில் இரண்டு மூன்று சொட்டுகள் எடுத்து நம்முடைய முகத்திலும் கண்களை சுற்றியும் நன்றாக கைகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்துவிட்டு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் மேல் சொன்ன அந்த பொடியை வைத்து பேக் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எவ்வளவு வயதானாலும் உங்களுடைய சருமத்திற்கு மட்டும் வயதாகாமல் இளமையாக திகழ முடியும்.
இதையும் படிக்கலாமே:கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் காணாமல் போக
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்திய இந்த மூலிகை பொருட்களை நாமும் பயன்படுத்தி வயதானாலும் இளமையான தோற்றத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.