- Advertisement -
- Advertisement -

நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும். மகிழ்ச்சி நிறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இறைவழிபாடு செய்கின்றோம். அதிலும் குறிப்பாக விசேஷமான பண்டிகை நாட்கள் வரும்போது, நாம் செய்யும் வழிபாடு நமக்கு இரட்டிப்பு மடங்கு பலன் கொடுக்கும். அந்த வகையில் நாளைய தினம் வைகுண்ட ஏகாதசி திதியானது வந்திருக்கிறது. இந்த நாளில் பெருமாளை நினைத்து என்னென்ன வழிபாடுகளை எல்லாம் மேற்கொண்டால் நமக்கு இருக்கும் துன்பங்கள் எல்லாம் தீரும், ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

வைகுண்ட ஏகாதசி பெருமாள் வழிபாடு

வைகுண்ட ஏகாதசி என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள். ஆக வைகுண்ட ஏகாதசி திதி முழுவதும், அந்த நாள் முழுவதும் நாராயணனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். வேலை நேரத்தில் வேலை பாருங்கள். வேலை இல்லாத மற்ற சமயங்களில் “நாராயணா நாராயணா, கோவிந்தா கோவிந்தா, வாசுதேவா”, என்று உங்களுக்கு எந்த நாமம் ரொம்பவும் பிடிக்குமோ அந்த நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

ஏகாதசி அன்று கண் விழித்து பெருமாளை வழிபாடு செய்தால் நேராக சொர்க்கத்தில் நமக்கு இடம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். இப்படி கண் விழிக்கக்கூடிய நேரம் கோவிலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏகாதசி திதி 10ம் தேதி வருகிறது. 10ம் தேதி இரவு ஏதாவது ஒரு பெருமாள் கோவிலில் தங்கி கண்விழுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது.

கோவிலுக்கு செல்லும்போது ஒரு நோட்டு புத்தகத்தை கையில் எடுத்துச் செல்லுங்கள். 1008 முறை ‘ஓம் நமோ நாராயணா’ எழுதலாம். ராமா ராமா என்று எழுதலாம். கோவிந்தா கோவிந்தா என்று எழுதலாம். இப்படி எந்த பெருமாளின் நாமத்தை எழுதினாலும் சிறப்பு. என்ன வேண்டுதலை மனதில் வைத்து இந்த நாராயணரின் பெயரை மந்திரமாக எழுதுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

- Advertisement -

தியேட்டருக்கு போய் சினிமா படம் பார்த்துக்கொண்டு ஒரு பொழுதும் ஏகாதசி திதி அன்று கண் விழிக்க கூடாது. பெருமாளின் கதைகளை சொல்லும் திரைப்படங்களை பார்க்கலாம் தவறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சொர்க்கவாசல் திறக்கும் சமயத்தில் ஏகாதசி அன்று அதிகாலை வேலையிலேயே எல்லோராலும் பெருமாளை சென்று தரிசனம் செய்ய முடியாது. கோவில்களிலும் ஆயிரம் கணக்கில், லட்சக்கணக்கில் பக்தர்கள் இருப்பார்கள். பெருமாளின் பின்பாக செல்வதற்கு நமக்கு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் திறக்கும் போது பெருமாளை மனதார நினைத்தாலே அந்த பெருமாள் பாதத்தில் நமக்கு இடம் கிடைத்து விடும்.

- Advertisement -

ஏகாதசி திதி அன்று முழுவதும் சொர்க்கவாசல் திறந்துதான் இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்யுங்கள். பெருமாளை தரிசனம் செய்யும் போது உங்கள் உள்ளங்கைகளில் கொஞ்சம் சில்லறை காசுகளும், கொஞ்சம் துளசி இலைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

சொர்க்கவாசல் வழியாக நிற்கும் பெருமாளை தரிசனம் செய்து, உங்கள் கையில் இருக்கும் சில்லறை நாணயங்களையும் துளசி இலைகளையும் பெருமாளின் பாதத்தில் போட்டு விட்டு, உங்களுடைய துன்பங்கள் தீர வேண்டும். இனிமேல் நான் எந்த பாவமும் செய்ய மாட்டேன், அறிந்தோ அறியாமலும் செய்த பாவத்திற்கு மன்னிப்பும் கேளுங்கள்.

என் வாழ்க்கையில் நல்லதை மட்டும் நடத்திக் கொடு பெருமாளே என்று பிரார்த்தனை செய்தால் உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த பாவங்களுக்கு எல்லாம் மன்னிப்பு கிடைக்கும். இனி வாழக்கூடிய நாட்களில் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் இருக்கும் துயரங்கள் துன்பங்கள் நீங்கி பொருளாதார ரீதியாகவும் சரி, ஆரோக்கிய ரீதியாகவும் சரி, குடும்ப பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, நல்லதொரு தீர்வை அந்த பெருமாள் உங்களுக்கு கொடுத்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: பொருளாதாரத்தில் உயர முருகன் விளக்கு பரிகாரம்

நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரங்கள் சமர்ப்பணம். அனைவருக்கும் எம்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -