- Advertisement -

புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி வழிபாடு

- Advertisement -

இன்று புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை. தேய்பிறை பஞ்சமி திதியோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் வாராஹி வழிபாடு செய்வது நம்முடைய வாழ்நாள் துன்பங்களை நீக்கும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் 11-10-2025 மாலை 6 மணிக்கு மேலாக, இரவு 10 மணிக்கு முன்பாக உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான பூஜை மற்றும் ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரத்தை பற்றியும் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய வாழ்நாள் பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் தீராத துன்பங்களை எதிர்கொள்வதற்கு முதல் காரணம், அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி, பொறாமை பார்வை, வயிற்றெரிச்சல், எதிரிகளால் ஏவி விடப்படும் ஏவல் பில்லி சூனியம் இப்பேற்பட்ட பிரச்சனையில் இருந்து நாம் உடனடியாக விலக வேண்டும், எதிரி தொல்லையிலிருந்து நம்மை நாமே பாதுகாக்க வேண்டும் என்றால் பஞ்சமி திதி அன்று வாராஹி வழிபாடு செய்வது நல்லது. எதிரி தொல்லையில் இருந்து தப்பித்தாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய முன்னேற்ற தடைகள் விலகிவிடும்.

- Advertisement -

தேய்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு

இன்று மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாராகியை அந்த தீபச்சுடரில் ஆவாகனம் செய்யுங்கள். வாராகித் தாயே என் வீட்டில் உன் திருவுருவப்படம் இல்லை. இந்த தீபச்சுடரில் அமர்ந்து நீதான் என் குடும்பத்தை காக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளுங்கள். வாராஹி தாய் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்கில் காட்சி கொடுப்பாள்.

திருவுருவப்படம் இருந்தால் அந்த திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். மாதுளை பழ முத்துக்களை உதிர்த்து போட்டு வாராகிக்கு நெய்வேத்தியம் வைத்தால் செல்வ செழிப்பில் நீங்கள் உயர்ந்த இடத்திற்குச் செல்வீர்கள்.

- Advertisement -

ஒரு சின்ன கின்னத்தில், 1 கைப்பிடி கல் உப்பும், 5 மிளகு வைத்து வாராகியின் பாதத்தில் வைத்து விடுங்கள். என்னை பின் தொடரும் கஷ்டங்கள், கெட்ட சக்திகள், எதிரி தொல்லைகள் அனைத்தும் என்னை விட்டு விலக வேண்டும். இதோடு சேர்த்து என்னைப் பிடித்த கடன் கஷ்டமும், விலக வேண்டும் என்று சொல்லி மனமுருகி வேண்டுதல் வைத்து, கற்பூர ஆராத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். வழிபாடு நிறைவடைந்த உடன் அந்த கல்உப்பு மிளகும் சிறிது நேரம் பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

தாந்திரீக பரிகாரம்

இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, அதாவது இரவு 10 மணிக்கு முன்பாக , பூஜை அறையில் வைத்திருக்கும் இந்த கல்லுப்பையும் மிளகையும் எடுத்து உள்ளங்கைகளில் கொட்டி, உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றுங்கள். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஏற்ற இறக்கமாக மூன்று முறை, ஏற்றி இறக்கி இதை அப்படியே எரிகின்ற சூடத்தில் போட்டு விட்டால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் தீரும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை தரும் துளசி பூஜை

கூடுமானவரை உங்கள் நிலை வாசலுக்கு வெளியில் இருக்கக்கூடிய இடத்தில் இந்த பொருட்களை நெருப்பில் போடலாம். அப்படி இல்லை என்றால் மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று நெருப்பில் போடுங்கள். வீட்டிற்கு உள்ளேயே இந்த பொருட்களை நெருப்பில் போடுவதை தவிர்ப்பது நல்லது. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல் இன்றைய தினத்தில் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by