- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளத்தை தரும் துளசி பூஜை

செல்வ வளத்தை தரும் துளசி பூஜை

- Advertisement -

பெருமாளுக்குரிய மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இப்பொழுது வரக்கூடிய சனிக்கிழமை என்பது புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் துளசி இலையை வைத்து எப்படி வழிபாடு செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். அதிலும் பெருமாளை வீட்டில் வழிபாடு செய்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போடும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். இதுவரை தளிகை போடாதவர்கள் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இந்த நான்காவது சனிக்கிழமை தளிகை போட்டு பெருமாளை வழிபாடு செய்யலாம். காலையில் 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள் அல்லது காலை 10:45 மணியிலிருந்து 11 45 மணிக்குள்ளோ வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் பெருமாளின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் மாதம் 11-ம் தேதி நாம் பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் துளசி இலைகளால் பூஜை செய்ய வேண்டும். துளசி இலைகளை வாங்கி வந்து குறிப்பிட்ட அளவு சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் போட்டு வைத்து விடுங்கள். இந்த துளசி தீர்த்தத்தை சனிக்கிழமை காலையிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

ராகு கால, எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த துளசி பூஜையை நாம் செய்யலாம். வீட்டில் பெருமாளின் சிலை, வலம்புரி சங்கு போன்று ஏதாவது இருக்கும் பட்சத்தில் அதற்கு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த அந்த துளசி இலை தீர்த்தத்தை பயன்படுத்தி அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை அப்படி எந்த பொருட்களும் இல்லை பெருமாளின் படம் மட்டும்தான் இருக்கிறது என்பவர்கள் துளசி இலைகளை நம் கைப்பட மாலையாக கட்டி பெருமாளுக்கு போட்டு நன்றாக அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு அலங்காரம் செய்து முடித்த பிறகு பெருமாளுக்கு முன்பாக 9 அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அன்றைய தினத்தில் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தயார் செய்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு துளசி இலைகளை பயன்படுத்தி “ஓம் நமோ நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை பிரசாதமாக பிறருக்கு தர வேண்டும்.

இந்த முறையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை யார் ஒருவர் பெருமாளுக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் கிடைக்க பெற்று செல்வ வளத்துடன் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
புரட்டாசி நான்காவது சனிக்கிழமை பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் முழு மனதோடு இப்படி வழிபாடு செய்ய அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க பெற்று சிறப்புடன் வாழலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்