
1111 இது ஒரு ஏஞ்சல் நம்பர். சில பெரும் புள்ளிகளுடைய கார் நம்பர்கூட இது போல நான்கு ஒன்று ஒன்றாக சேர்ந்து இருக்கும். இதுபோல ஏஞ்சல் நம்பரை பல லட்சம் செலவு செய்து வாங்குவார்கள். இன்னும் சீக்ரட்டான கோட் நம்பர் எல்லாம் கூட இந்த நான்கு ஒன்று ஒன்றாக இருக்கும் படி சில பெரும் புள்ளிகள் பயன்படுத்துவார்கள். அப்படி இந்த நம்பருக்கு பின்னால் என்ன தான் மறைந்திருக்கிறது.
எதற்கு எல்லோரும் இந்த நம்பரை வேண்டும் என்று அடம் பிடித்து வாங்குகிறார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள், பெரும் புள்ளிகள், அரசியல் தலைவர்கள் எல்லாம், விஷயம் இல்லாமலா இந்த நம்பர் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. நமக்கு தாங்க இதெல்லாம் தெரியாது. இதைப் பற்றி எல்லாம் நாமும் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது. இதையெல்லாம் நாமும் ஏன் பின்பற்றக் கூடாது நாமும் பணக்காரராகலாமே. நாமும் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் இந்த ஏஞ்சல் நம்பரை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை 11-11-2024 பதினோராம் தேதி, பதினோராம் மாதம், மொத்தமாக, நான்கு ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. நாளைய தினம் காலை 11: 11 மணியை தவற விடக்கூடாது. அதேபோல இரவு வரக்கூடிய 11:11 மணியை தவிர விடக்கூடாது. அதாவது 11 மணி, 11 நிமிடங்கள் அடிக்கும்போது, உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொன்னால், அது நிச்சயம் நடக்கும். அந்த வேண்டுதலை 11 முறை நீங்கள் சொல்ல வேண்டும். முடிந்தால் ஒரு வெள்ளை காகிதத்தில் 11 முறை உங்கள் வேண்டுதலை எழுதுவது சிறப்பான பலனை தரும்.
இன்று எல்லோருக்கும் முதல் தேவையாக இருப்பது பணம்தான். பணத்தில் நீங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த குறிப்பிட்ட நேரத்தில் ‘பணம் பணம்’ என்ற வார்த்தையை 11 முறை சொல்லுங்கள். மாணவர்களாக இருந்து நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் ‘படிப்பு படிப்பு’ என்ற வார்த்தையை 11 முறை சொல்லலாம், அல்லது ‘தேர்ச்சி தேர்ச்சி’ என்ற வார்த்தையை 11 முறை சொல்லலாம். ‘நல்ல மதிப்பெண் தேவை’ என்ற வார்த்தையை 11 முறை சொல்லலாம். அது உங்கள் விருப்பம் தான்.
பணத்தை தாண்டி சில பேருக்கு கடன் சுமை அதிகமாக இருக்கும், கடனில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், ‘கடன் இல்லாத வாழ்க்கை தேவை’ என்பதை 11 முறை நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். இதையும் தாண்டி எனக்கு பணம் இருக்கு, கடன் இல்லை, அறிவு இருக்கு, கல்வித்திறமை எல்லாமே இருக்கு, குடும்பத்தில் சந்தோஷம் இல்லை வாழ்க்கைத் துணை இல்லை என்றால், நீங்கள் சந்தோஷமான வாழ்க்கை தேவை என்று கூட கேட்கலாம். நல்ல மனைவி தேவை, நல்ல கணவன் தேவை என்று கூட வேண்டுதல் வைக்கலாம்.
உங்களுக்கு என்ன தேவையோ அதை வேண்டி அந்த வரத்தை சுருக்கமாக 11 முறை இந்த பிரபஞ்சத்திடம் கேளுங்கள். நிச்சயமாக நீங்க கேட்டதை இந்த பிரபஞ்சம் கொடுக்கும். நாளைய தினம் மட்டும் தான் இந்த பரிகாரத்தை பின்பற்ற வேண்டும் என்பது கிடையாது, சாதாரணமான நாட்களை ஒப்பிடும்போது, நாளைய தினம் அதிசிறப்பான நாள்.
நாளைய தினம் செய்வது போலவே அன்றாடம் வரக்கூடிய அந்த 11:11 என்ற நேரத்தில் உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் கேட்கும் போது, இந்த நேரம் கடிகாரத்தில் வரும்போது, அந்த நம்பரை, அந்த நேரத்தை உற்று நோக்குங்கள், நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கும். நீங்களும் வாழ்க்கையில் நம்பர் 1 இடத்திற்கு வருவீர்கள்.
இதையும் படிக்கலாமே: 10-11-2024 அட்சய நவமி பரிகாரம்
நாமும் விஐபி வரிசையில் இந்த எண்ணை பல லட்சம் கொடுத்து வாங்கி, நம்முடைய காருக்கோ அல்லது தொலைபேசி எண்ணாகவோ வைத்துக் கொள்ளலாம். இந்த ரகசிய வழிபாட்டு முறையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மன நிறைவுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.