- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval10-11-2024 அட்சய நவமி பரிகாரம்

10-11-2024 அட்சய நவமி பரிகாரம்

- Advertisement -

ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வந்திருக்கக் கூடிய நவமி திதியை, அக்ஷய நவமி என்று சொல்கிறார்கள். அக்ஷயம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுக்க கூடியது என்பது பொருள். அக்ஷய பாத்திரம், அக்ஷய திருதியை இதெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். அக்ஷயம் என்றாலே பல மடங்கு பெருகுவது. இன்று வந்திருக்கக்கூடிய அக்ஷய நவமி திதியில் நம்முடைய வீட்டில் மகாலட்சுமியை நினைத்து நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

அட்சய நவமி பரிகாரம்

இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம், அப்படி இல்லையென்றால் இந்த பதிவை பார்த்தவுடன் இன்று இரவு 10 மணிக்குள் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்துவிட்டால், அந்த மகாலட்சுமியின் அருட்கடாட்சம் உங்களுக்கும் கிடைக்கும். அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல உங்களுடைய வீட்டிலும் செல்வ வளமானது குறையாமல் பெருகிக்கொண்டே இருக்கும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டு பூஜை அறை உங்கள் வீட்டு சமையல் அறை இரண்டு இடத்திலும் இந்த 1 வார்த்தையை மஞ்சளால் எழுத வேண்டும். பூஜையறையில் சுவற்றில் எழுத முடிந்தால் எழுதுங்கள். அப்படி இல்லை என்றால் பூஜை அறை தரையை சுத்தம் செய்துவிட்டு இந்த வார்த்தையை எழுதலாம், அல்லது அலமாரியில் உள்ள ஸ்லாப் மீதும் இந்த வார்த்தையை எழுதலாம்.

மஞ்சளில் கொஞ்சமாக தண்ணீரோ பன்னிரோ விட்டு கரைத்து உங்களுடைய வலது கை, மோதிர விரலால் அந்த மஞ்சளை தொட்டு, பூஜையறையில் ‘லாபம்’ என்ற வார்த்தையை எழுதுங்கள். அதேபோல தான் நம் வீட்டில் தன தானியத்திற்கும் பஞ்சம் வரக்கூடாது, சமையலறை அடுப்பு, சமையலறை மேடையை எல்லாம் தண்ணீர் போட்டு சுத்தமாக துடைத்துவிட்டு, சமையலறை சுவற்றில் அடுப்புக்கு பின்பக்கம் இருக்கும் சுவற்றிலும் ‘லாபம்’ என்ற வார்த்தையை எழுதிவிட்டு, நீங்கள் உறங்கச் செல்லுங்கள்.

- Advertisement -

இந்த லாபம் என்ற வார்த்தையை எழுதி விட்டு, மகாலட்சுமியிடம் உங்களுக்கு தேவையானதை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த லாபம் என்ற வார்த்தை இன்றைய தினம் எந்த வீட்டில் எல்லாம் எழுதப்படுகிறதோ அந்த வீட்டில் பணத்திற்கும் பஞ்சம் வராது, தன தானியத்திற்கும் பஞ்சம் வராது, அக்ஷய பாத்திரத்தில் இருந்து பொன் பொருள் தன தானியம் சுரப்பது போல, உங்களுடைய வீட்டிலும் செல்வ வளம் சுரந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீண் விரயம் ஏற்படாமல் தடுக்கும் பரிகாரம்

அதற்கான அருள் ஆசியை மகாலட்சுமி உங்களுக்கு நிச்சயம் கொடுப்பாள். மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள் தேவைக்கு ஏற்ப கேளுங்கள், நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்