- Advertisement -

நாளை 14-07-2025 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி. திங்கட்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு செய்வதே நமக்கு அதிசிறப்பான பலனை கொடுக்கும். சந்திர பகவானுக்கும், ஈசனுக்கும் உகந்த இந்த திங்கட்கிழமை நாளில் சங்கடஹர சதுர்த்தி வந்திருப்பது அதி சிறப்பு. இந்த நாளில் விநாயகர் வழிபாடு செய்வதை யாரும் தவற விடாதீங்க.

அதிலும் குறிப்பாக வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலக, மன குழப்பங்கள் தீர, காரிய தடை விலக இந்த நாளில் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பொதுவாக மாலை நேரத்தில், கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபாடு செய்வது, அதி சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். நாளை மாலை கட்டாயம் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் வாங்கி கொடுத்து சிதறு தேங்காய் உடைத்து உங்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இது முதல் விஷயம். பிறகு காரிய தடை விலக, வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு அதி அற்புதமான பரிகாரத்தை இப்போது பார்க்கலாம்.

காரியத்தடை விலக சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

ஒரு வெள்ளை நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் சுத்தமான மஞ்சள் தூள் போட்டு, கொஞ்சம் தண்ணீர் அல்லது பன்னீர் விட்டு குழைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கை மோதிர விரலால் அந்த மஞ்சளை தொட்டு வெள்ளை காகிதத்தில் பிள்ளையார் சுழி போட வேண்டும். இதே போல 27 முறை பிள்ளையார் சுழி போட வேண்டும். சின்ன சின்னதாக போட்டால் போதும்.

- Advertisement -

பிறகு உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரல் நுனி பகுதியில் மஞ்சள் ஒட்டி இருக்கும் அல்லவா. அந்த விரலை அப்படியே உங்களது இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளையார் சுழி போட்ட விரலில் அதீத நேர்மறை ஆற்றல் வந்திருக்கும். அதை நெற்றி பொட்டு மத்தியில் வைத்துக் கொண்டு “ஓம் கிலீம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நாளைய தினம் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து விநாயகரை வேண்டினால் எவ்வளவு பெரிய காரிய தடையும் விலகும். நீங்கள் என்ன காரியம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பிள்ளையார் சுழி போடுகிறீர்களோ அந்த காரியம் அடுத்த 27 நாட்களுக்குள் நிச்சயம் நடக்கும். உங்களுக்கு தற்போது வாழ்க்கையில் எந்த ஒரு காரியம் தடைபட்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த காரியம் நிவர்த்தியாக நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆனி கடைசி ஞாயிறு ரகசிய பரிகாரம்

அடுத்த 27 நாளில் அந்த காரியத்தடை விலகி வாழ்க்கையில் வெற்றிக்கான உண்டான அத்தனை வழிகளையும் விநாயகப் பெருமான் காட்டிக் கொடுப்பான். எல்லாம் இனி உங்கள் வாழ்க்கையில் ஜெயம் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -