குடும்பத்தில் யாராவது ஒருவராவது பொருளாதாரத்தை பெருக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையவும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும், வருமானம் பெருக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய ஒரு அற்புத நாளாக தான் ஆனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. ஆனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பது ஜூலை மாதம் 13-ஆம் தேதியான இன்று இருக்கிறது. இன்று யாருக்கும் தெரியாமல் நாம் செய்யக்கூடிய ஒரு சூட்சுமமான பரிகாரம் நம் குடும்பத்தின் பொருளாதாரம் முன்னேற்றத்தை மேம்படுத்தும். மேலும் வருமானத்தை பல மடங்கு பெருக்கி தரும். அந்த ரகசிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஞாயிறு ரகசிய பரிகாரம்
ஆனி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அந்த பரிகாரத்திற்கு பலன் அதிக அளவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பொருளாதார தடைகள் நீங்கவும் வருமானம் பல மடங்கு பெருகவும் செய்ய வேண்டிய ஒரு ரகசிய பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை ஆனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு தான் செய்ய வேண்டும். அசைவம் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இருந்தால் அவர்களும் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. மேலும் இந்த பரிகாரத்தை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை கல் உப்பு, விரலி மஞ்சள் மற்றும் வசம்பு. இவை மூன்றுமே மகாலட்சுமி அம்சம் கொண்ட பொருட்களாகவே கருதப்படுகின்றன. இந்த பொருட்களை ஒன்று சேர்த்து நாம் வைப்பதன் மூலம் மகாலட்சுமி அருளால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதற்கு ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப கள் உப்பை போட்டுக்கொள்ள வேண்டும். அதற்குள் ஒரே ஒரு விரலி மஞ்சளையும் ஒரு சிறிய துண்டு வசம்பையும் உள்ளே வைத்து கல்லுப்பை போட்டு மூடி விடுங்கள்.
பிறகு இந்த பாட்டிலை மூடி யாருக்கும் தெரியாத அளவிற்கு ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள். சமையல் அறையிலும் வைக்கலாம். பூஜை அறையிலும் வைக்கலாம். மாதத்திற்கு ஒருமுறை இந்த கல்லுப்பை மாற்றி புதிய கல்லுப்பை வைத்து விட வேண்டும். பழைய கல் உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய விரலி மஞ்சளும் வசம்பும் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அதை அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை அதன் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் புதிதாக மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: அஷ்டமங்கல பொருட்கள்
பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் பணவரவு அதிகரிக்கவும் யாருக்கும் தெரியாமல் செய்யக்கூடிய இந்த ரகசிய பரிகாரத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டும் வேண்டிக் கொண்டும் செய்யும்பொழுது விரைவிலேயே அவர்கள் நினைத்தது போல் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.