
17-9-2024ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி திதியும் வரவிருக்கின்றது. இந்த பௌர்ணமி நாளில், அமைதியாக இருக்கும் சூழலில், நீங்கள் இந்த பிரபஞ்சத்திடம் என்ன கேட்டாலும், அது உங்களுக்கு உடனே கிடைக்கும். உங்களுடைய விருப்பமான தெய்வத்தின் பெயரைச் சொல்லி, தியானம் செய்யலாம். விருப்பமான வரங்களைக் கேட்டு இந்த பிரபஞ்சத்திடம் தியானம் செய்யலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி விருப்பம் இருக்கும்.
ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் தெரிந்திருக்கும், அதை நீங்கள் பின்பற்றி இந்த நாளில் உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். எங்களுக்கு எதுவுமே தெரியாது. எங்களை சுற்றி இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜி அனைத்தும் விலக வேண்டும், வாழ்வு வளம் பெற வேண்டும், எங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்க வேண்டும். இதற்கு ஏதாவது ஒரு மந்திரம் இருக்கிறதா என்று கேட்டால் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு தான்.
பௌர்ணமி திதி என்றாலே அதில் அம்மன் வழிபாட்டிற்கு முதலிடம் கொடுக்கப்படும். பௌர்ணமி என்றாலே நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு காமாட்சியம்மன் வழிபாடு. பௌர்ணமி சூரிய நிலவு வானத்தில் வரும் போது, இந்த மந்திரத்தை சொல்லுபவர்கள் சொல்லலாம். அப்படி இல்லை பௌர்ணமி அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழித்து இந்த மந்திரத்தை சொல்ல முடியும் என்றாலும் சொல்லலாம்.
அதுவும் முடியவில்லை என்றால் இரவு நீங்கள் தூங்கச் செல்லும் போது, உங்கள் வீடு அமைதியாக இருக்கும். உங்களுக்கும் பெருசாக எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. தூங்குவதற்கு முன்பு உங்கள் படுக்கையிலேயே அமர்ந்து கூட இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி விடுங்கள். உங்களை பிடித்த நெகட்டிவ் எனர்ஜி அனைத்தும் விலகி, உங்களுக்கான நல்வாழ்வு பிறக்க காமாட்சி அம்மனின் மனதார நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் காமாக்ஷி
தேவ்யை சித்தி தாத்ரே நமஹ !
இந்த மந்திரத்தை சொல்ல எண்ணிக்கை எல்லாம் அவசியம் கிடையாது. ஒவ்வொரு வார்த்தைகளாக மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு, இந்த மந்திரத்தை ரொம்பவும் மெதுவாக உச்சரியுங்கள். அவசர அவசரமாக மந்திரத்தை சொல்லி பலன் வேண்டும் என்று கேட்கக் கூடாது. எவ்வளவு பொறுமையாக இந்த மந்திரத்தை ராகத்தோடு இழுத்து உச்சாடனம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய உடம்பில் நல்ல ஆக்கர்சனம் ஏற்படும்.
நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். உடம்பை சுற்றி இருக்கக்கூடிய அத்தனை கெட்ட சக்திகளும் விலகும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி நாளில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். மந்திரத்தை சொல்லும்போது உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்கக் கூடாது. 15 நிமிடம் மந்திரத்தை சொன்னாலும் அது அமைதியான நேரமாக இருக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம்
அடுத்த பௌர்ணமி தினத்திற்குள் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். பௌர்ணமி நாளில் மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு விடக்கூடாது. அடுத்த பௌர்ணமி திதி வரை தினமும் ஒருமுறையாவது, மனதை ஒருநிலைப்படுத்தி இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அற்புதமான இந்த பௌர்ணமி திதி நாளை யாரும் தவற விடாதீங்க, உங்க வாழ்நாளில் பெரிய நல்ல மாற்றங்கள் நிகழ இந்த நாள் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.