
நாளை 20-5-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதி வந்திருக்கிறது. அதிசக்தி வாய்ந்த அஷ்டமி திதி இது. காரணம் செவ்வாய்க்கிழமையே கடன் சுமையை தீர்ப்பதற்கு அதிசக்தி வாய்ந்த கிழமை. முருகப்பெருமானுக்கு உரிய கிழமை. இந்த நாளில் அஷ்டமி திதி வந்திருப்பது என்பது மிகவும் நல்ல விஷயம்.
இன்னும் இந்த நாளில் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு உடனடி பலன் தர வேண்டும் என்றால், இந்த நாளில் வரும் சனி ஹோரையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். நாளைய தினம் செவ்வாய்க்கிழமை. எந்த நேரத்தில் பைரவரை வழிபாடு செய்தால் கடன் சுமையிலிருந்து அதி விரைவாக வெளிவர முடியும், நாளைய தினம் சூட்சமமான சனி ஹோரை எப்போது வருகிறது ஆன்மீகம் சார்ந்த ஒரு அறிய தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
நாளை காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். நாளை காலை குளிக்கும்போது தண்ணீரில் உங்களுடைய வலது உள்ளங்கையை வைத்துக் கொண்டு, இன்று பைரவர் வழிபாட்டை நான் நிறைவாக செய்து முடிக்க வேண்டும்.
அதற்கு கங்கா திருத்தமான நீங்கள்தான் எனக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் என்று சொல்லி குளிக்க வேண்டும். வழிபாட்டில் தடைகள் வரக்கூடாது என்பதற்காக இந்த வேண்டுதலை வைத்து குளித்து முடித்து விடுங்கள். காலையிலேயே பைரவரை நினைத்து செவ்வாய் கிழமையை துவங்குங்கள். காலை எந்த வழிபாட்டு முறைகளும் கிடையாது.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 டு 7. உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு பூசணிக்காயை வாங்கி இரண்டாக அறுத்து உள்ளே இருக்கும் விதைகளை எல்லாம் எடுத்து பூசணிக்காய் க்கு மேலே மஞ்சள் குங்குமம் தடவி, சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடிமனான திரி தயார் செய்து அந்த நல்லெண்ணெயில் போட்டு, தீபம் ஏற்றி, அந்த தீபத்தை பைரவரை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
அதாவது கோவிலில் இப்போது தீபம் ஏற்றுவதற்கு தனியாக ஒரு இடம் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அந்த இடத்தில் தீபம் ஏற்றி விடுங்கள். பைரவர் எந்த திசையில் இருக்கிறார், நீங்கள் ஏற்றிய தீபத்தை அந்த திசை நோக்கி வைத்து விடுங்கள். இந்த பூசணிக்காய் தீபத்தை அப்படியே வைத்தால் தரையில் நிற்காது.
தரையில் தீபத்தை ஏற்றவும் கூடாது. ஒரு பாக்கு மட்டை தட்டோ அல்லது வாழை இலையோ போட்டு அதன் மேல் பச்சரிசி பரப்பி பச்சரிசிக்கு மேலே இந்த தீபத்தை நிற்க வைத்து அழகாக ஏற்றி வைத்துவிட்டு, பைரவருக்கு உங்கள் கையால் உதிரி வில்வ இலைகளை வாங்கிக் கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பைரவரிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டால், உங்களுக்கு இருக்கும் கடன் சுமையானது படிப்படியாக குறையும்.
சனி பகவானால் ஏற்படும் தாக்கங்களும் குறையும். காரணம் சனி பகவானுக்கு அதிதேவதையாக இருப்பவர் பைரவர். செவ்வாய்க்கிழமை மாலை 6 டு 7 சனி ஹோரை. இந்த நேரத்தில் இந்த தேய்பிறை அஷ்டமி திதி வழிபாட்டை எவர் ஒருவர் செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் அபரிவிதமான வெற்றியை காணலாம். வேண்டுதல் முழு நம்பிக்கையோடு வைக்க வேண்டும். பைரவரே என்னுடைய கடனை உன் கையில் ஒப்படைத்து விட்டேன்.
இதையும் படிக்கலாமே: கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்
காலத்தால் வந்த கடனை நீ தான் அடைக்க வேண்டும் என்று சொல்லி பொறுப்பை பைரவரிடம் ஒப்படையுங்கள். முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவரலாம். இந்த எளிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றுங்கள். நல்ல பலன் கிடைக்கும். நாளைய தினம் உங்களால் முடியும் பட்சத்தில் வீதியில் இருக்கும் நாய்களுக்கு உங்களால் முடிந்த பிஸ்கட், உங்களால் முடிந்த சாப்பாட்டை வைப்பது சுபிட்சத்தை உண்டு பண்ணும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.