நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையே பணம் தான். ஒன்று பணம் சம்பாதிப்பது, இன்னொன்று பண பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கி அந்த கடனிலிருந்து மீள்வது எப்படி தெரியாமல் தவிப்பது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒருவர் சமாளித்து விட்டால் போதும் அவர்கள் வாழ்க்கையில் என்றென்றைக்கும் நிம்மதியாக வாழலாம். இதையெல்லாம் சொல்லவும் கேட்கவும் தான் நன்றாக இருக்கும் நடைமுறையில் ஒத்து வராது என்று தோன்றலாம். ஆனால் சில வழிபாட்டு முறைகள் இப்பேற்பட்ட பிரச்சனையை கூட எளிதாக தீர்த்துவிடும் என்று நம்பப்படுகிறது. அப்படியான ஒரு வழிபாட்டை தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
கடனடைய சொல்ல வேண்டிய மந்திரம்
கடன் என்னும் இந்த அரக்கனால் பாழாய் போன குடும்பங்கள் எத்தனையோ உண்டு. இப்படி ஒருவருக்கு கடன் சுமை ஏற்பட்டு அதனால் அவர் அவதிக்குள்ளாவதும் கூட அவருடைய கர்ம வினையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எப்போதோ நாம் செய்த வினைக்கு இப்போது இந்த கடனால் துன்பப்படுவது என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது தான். அப்படி நாம் எந்த சூழ்நிலையில் கடனால் சிக்கித் தவித்திருந்தாலும் இந்த வழிபாடு நம்முடைய மீளா கடனிலிருந்து மீண்டு வர வழி புரியும் என்று சொல்லப்படுகிறது.
முதலில் நாம் கடனால் துன்பப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அந்தக் கடனை அடைப்பதற்கான வழி நமக்கு தென்பட்டாலே போதும் கடனிலிருந்து பாதி மீண்டு விட்டோம் என்று நம்பிக்கை வந்துவிடும். அப்படியான நம்பிக்கையையும் வழியையும் நமக்கு அருளக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் நரசிம்மர். ஏனெனில் இந்த நரசிம்மர் நாளை என்று சொல்லையே அறியாதவர் என்றும், துன்பம் என்று வந்தவர்களின் துயரை உடனே தீர்க்கக் கூடியவர் என்றும் சொல்லுவார்கள்.
அப்படியான நரசிம்மரை நம்முடைய கடன் பிரச்சனை தீர வழிபடும் பொழுது உடனே நம்முடைய பெரும் துன்பத்திலிருந்து மீண்டு வர வழிபுரிவார் என்று சொல்லப்படுகிறது. கடன் அடைய வேண்டுமென்றால் அதற்கு பணவரவு நிச்சயம் வேண்டும். அந்த பணத்தை அருளக்கூடிய தெய்வமாக இருப்பவர் லட்சுமி தாயார். ஆகையால் இந்த வழிபாட்டிற்கு நரசிம்மரோடு சேர்த்து லட்சுமி தாயாரையும் நாம் வணங்க வேண்டும். அதாவது லட்சுமி நரசிம்மரை வணங்க வேண்டும்.
இந்த லட்சுமி நரசிம்மர் வழிபாட்டை நாம் சுவாதி நட்சத்திர நாளில் செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் சேர்த்து லட்சுமி நரசிம்மரை நினைத்து ருண விமோசன மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை நாம் நாள்தோறும் ஜெபிக்க ஜெபிக்க நம்முடைய கடன்கள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கான வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.
ருண விமோசன ஸ்தோத்திரம்:
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம் அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்
என்ற இந்த மந்திரத்தை நாம் தினந்தோறும் லக்ஷ்மி நரசிம்மரை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சொல்ல வேண்டும். அதன் பிறகு நம்முடைய கடன் அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் பொழுது நிச்சயம் இதுவரையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி நல்லதொரு வழியை நமக்கு நரசிம்மர் காட்டுவார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றலை விரட்டும் வாராகி மந்திரம்
பெரும் கடனால் அவதிப்படுபவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறலாம்.