- Advertisement -
- Advertisement -

தகுதிக்கு மீறி நாம் வாங்கிய கடன், நம்மை என்றைக்குமே நிம்மதியாக வாழ விடாது. நீங்கள் இதை இன்றிலிருந்து நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை, இந்த மைத்திரையை முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுக்கும் போது பெரிய அளவில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், சீக்கிரம் அடைக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இந்த மாதத்தின் மைத்திரேய முகூர்த்தம் நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. நாளைய தினம் கடனை திருப்பித் தர வேண்டிய மயித்ரேய முகூர்த்த நேரம் என்ன, நாளைய தினம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மைத்தேய முகூர்த்த நேரம்

நாளை 20-9-2024 வெள்ளிக்கிழமை இரவு 7:54 மணி முதல் 9:30 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் இருக்கிறது. இது இரவு நேரத்தில் தான் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் உங்களுடைய கடன் தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் வங்கிகள் திறந்திருக்காது. உங்களால் முடிந்தால் உங்கள் அக்கவுண்டில் பணம் செலுத்த முடியும் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியும் என்றால் ஒரு சிறு தொகையை திருப்பி வங்கி கணக்கில் செலுத்தவும்.

அப்படி முடியாது என்பவர்கள் ஒரு வெள்ளை கவரில் நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்கள், அந்த வங்கியின் பெயர், அப்படி இல்லை என்றால் அந்த நபரின் பெயரை எழுதி, அந்த கவருக்குள் ஒரு சிறு தொகையை போட்டு மடித்து ஒரு அலமாரியில் பத்திரப்படுத்தி வையுங்கள். சீக்கிரமே முழு கடனை அடைக்க கூடிய நேரம் காலம் வந்துவிடும் மொத்த பணம் கிடைத்துவிட்டால் கவரில் இருக்கும் பணத்தோடு சேர்த்து எடுத்து கடன் காரர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் விநாயகப் பெருமானை நினைத்து உங்கள் கடனிலிருந்து ஒரு சிறு தொகையை திருப்பித் தர நிச்சயம் உங்கள் கடன் தொல்லை படிப்படியாக குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றுங்கள் கடன் என்றாலே அது ராகு கேது அம்சமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த ராகு கேதுவை சமாளிக்க விநாயகர் மட்டும்தான் நமக்கு வழி காட்ட வேண்டும். நாளைய தினம் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் அமைதியான இடத்தில் அமர்ந்து ‘ஓம் க்லீம் நமஹ’ என்ற இந்த விநாயகர் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு, இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் சென்று, பிள்ளையாருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து பிள்ளையார் கோவிலிலேயே அமர்ந்து உங்கள் கடன் சுமை தீர வேண்டும் என்று இந்த மந்திரத்தை சொன்னால் இன்னும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: மகாளய பட்சம் பரிகாரம்

8 மணியில் இருந்து 9 மணி வரை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் திறந்து இருந்தால் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். தெருமுனையில் கூட பிள்ளையார் கோவிலில் அமர்ந்திருப்பார். அந்தப் பிள்ளையார் முன்பு நின்று இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -