- Advertisement -

இன்று 23-09-2025 மூன்றாம் பிறை தரிசனம் மந்திரம்

- Advertisement -

ஈசனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அனைவரும் கைலாயத்திற்கு தான் செல்ல வேண்டும். ஆனால் பக்தர்களை காண்பதற்காகவே, அந்த ஈசன் மாதத்தில் ஒரு நாள் மூன்றாம் பிறை அன்று நமக்கு தரிசனம் கொடுக்க, நம் வீடு தேடி வருகின்றான். நம்மை தேடி வரும் அந்த ஈசனை தரிசிக்க தவறவிட்டவர்கள், துரதிஷ்ட சாலைகள். இன்று 23-9-2025 செவ்வாய்க்கிழமை, நவராத்திரியில் வந்திருக்கக்கூடிய மூன்றாம் பிறை தரிசனம்.

இது மிகவும் சக்தி வாய்ந்த மூன்றாம் பிறை தரிசனம். மற்ற நாட்களில் பிறை நிலவை பார்த்தால் அந்த ஈசனின் அருள் மட்டும்தான் கிடைக்கும். இன்று பிறை நிலவைப் பார்த்தால் சிவ சக்தியின் ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு கிடைக்கும். இந்த செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு உரிய நாள். நவராத்திரியின் இரண்டாவது நாள். ஆக தம்பதி சரீரமாக இருக்கும் அந்த சிவ சக்தியின் ஆசீர்வாதத்தை நாம் பெற வேண்டும் என்றால், இன்று செய்ய வேண்டிய வழிபாடு மூன்றாம் பிறை வழிபாடு. யாரும் தவற விடாதீங்க.

- Advertisement -

இன்று மாலை 6:30 மணிக்கு மேலாக மேற்கு திசை நோக்கி நின்று கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி பரப்பி, மண் அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி மனமுருக ஈசனை நினைத்து பிறை சூடா, எனக்கு உன்னுடைய தரிசனம் தேவை என்று எவர் ஒருவர் உண்மையான பக்தியோடு ஈசனை வேண்டி விரும்பி காண விரும்புகிறீர்களோ,  அவர்களுடைய கண்ணுக்கு நிச்சயம் பிறை நிலவின் தரிசனம் கிடைக்கும். அது வெறும் பிறை நிலா கிடையாது. ஈசனின் தரிசனம்.

இந்த கலியுகத்திலும் கடவுளை தரிசனம் செய்ய முடியும் என்றால் அதற்கு ஒரே சாட்சி இந்த பிறை நிலா தான்.  இந்தப் பிறை நிலவை தரிசனம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி அன்யூன்யம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உயரும். இதோடு மட்டும் அல்லாமல் நம்முடைய மனம் எப்போதும் தெளிவாக இருக்கும். டக்கு டக்குனு நீங்க எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும்.

- Advertisement -

மூன்றாம் பிறை தரிசனம் மந்திரம்

இந்த சந்திரமவுலீஸ்வரனின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. பிறை நிலவைப் பார்த்து, தரிசனம் தரக்கூடிய அந்த ஓரிரு நிமிடங்களுக்குள் நமக்கு என்ன வேண்டுதலை வைப்பது என்பது புரியாது. ஆனந்தத்தில் நம்முடைய மனம் மூழ்கிவிடும். “ஓம் சந்திர மௌலிஸ்வராய நமஹ ! ஓம் சக்தி பராசக்தி” என்ற மந்திரத்தை சொல்லி எம்பெருமானை வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சக்தி வாய்ந்த முருகர் வழிபாடு

நீங்கள் வேண்டியது மட்டுமல்ல, வேண்டாத பல நல்ல விஷயங்களையும் அவன் உங்களுக்காக கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்றான். இந்த இனிய நாளில் அனைவருக்கும் அந்த ஈசனின் தரிசனம், பிறை நிலவின் மூலம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by