- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசக்தி வாய்ந்த முருகர் வழிபாடு

சக்தி வாய்ந்த முருகர் வழிபாடு

- Advertisement -

இன்று 23-9-2025 செவ்வாய்க்கிழமை. நவராத்திரியின் இரண்டாவது நாள். இன்று மதியம் 2:30 மணிக்கு மேலாக சித்திரை நட்சத்திரம் பிறக்கவிருக்கிறது. சித்திரை நட்சத்திரம் செவ்வாய் பகவானுக்கு உரிய நட்சத்திரம். செவ்வாய் பகவானுக்கு உரிய அதி தேவதை முருகப்பெருமான்தான். செவ்வாய்க்கிழமையில் சித்திரை நட்சத்திரம் சேர்ந்து வருவது என்பது அதி சிறப்பு.

ஆகவே இந்த நாளில் முருகர் வழிபாட்டை யாரும் தவற விடக்கூடாது அல்லவா. உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வீடு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை எது இருந்தாலும் சரி, இன்று முருகப்பெருமானை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீராத துன்பங்கள் விலகும்.

- Advertisement -

சித்திரை நட்சத்திரம் முருகன் வழிபாடு

இன்று மாலை 6:00 மணிக்கு மேலாக வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். கோவிலுக்குப் போகும்போது 2 வெற்றிலை, 2 கலிப்பாக்கு, 2 செவ்வாழைப்பழம் இந்த 3 பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்கள் ரொம்பவும் உகந்தது. அதையும் வாங்கிக் கொள்ளுங்கள். இதுபோக தீபம் ஏற்ற வேண்டும். நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம் அது உங்களுடைய விருப்பம். இரண்டே இரண்டு தீபங்கள் ஏற்றினால் போதும்.

கோவிலுக்கு சென்று முருகனுக்கு முன்பாக இருக்கும் வேலை முதலில் வணங்கி, பிறகு மயில் வாகனத்தை வணங்கிக் கொண்டு, தீபம் ஏற்றிவிட்டு, முருகனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்லுங்கள். உங்களுடைய கையில் இருக்கும் வெற்றிலை பாக்கு செவ்வாழைப்பழத்தை குருக்களிடம் கொடுத்து, முருக பெருமானின் திருப்பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

அதை நீங்கள் திரும்பவும் வாங்கிக் கொள்ள வேண்டாம். பூக்களை முருகனுக்கு கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த பிரசாதத்தை மட்டும் நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். முருகன் பாதத்தில் வைத்த வெற்றிலை பாக்கு செவ்வாழைப்பழம் இது மூன்றும் உங்களுடைய பிரார்த்தனையை முருகப்பெருமானிடம் கொண்டு சேர்த்து விடும்.

உங்கள் வாழ்க்கையில் இப்போது இருக்கும் குறிப்பிட்ட பிரச்சினை, ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று இந்த தாம்பூலத்தை கையில் வைத்துக் கொண்டு, மனமுருக முருகன் கோவிலில் நின்று, வேண்டி அந்த தாம்பூலத்தை குருக்கள் இடம் கொடுத்து, முருக பெருமான் பாதத்தில் வைக்கும் போது உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தது போல ஒரு உணர்வு வரும் பாருங்க. மனதில் உள்ள பாரத்தை எல்லாம் அவன் பாதத்தில் இறக்கி வைத்து விட்டோம் என்ற திருப்தியே உங்கள் பிரச்சினையை சரி செய்து விடும்.

- Advertisement -

வழிபாட்டை நம்பிக்கையோடு செய்பவர்களால் மட்டும் தான் இதை உணர முடியும். இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்து முருகன் கோவில் அமர்ந்து வேண்டி கொண்டவர்கள் யாரும் ஏமாற்றப்பட மாட்டீர்கள். முருகன் நீங்கள் கேட்ட வரத்தை உங்கள் கையோடு கொடுத்து அனுப்புவார் பாருங்க. நம்பிக்கை இருந்தால் இன்று மாலை இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: சகல செல்வத்தையும் தரும் நவராத்திரி தீபம்

எளிமையான பரிகாரங்களை சில சக்தி வாய்ந்த நாட்களில் செய்யப்படும் போது நம்முடைய துன்பங்கள் தீர கடவுளே வந்து நேரில் அருள் வாக்கு சொன்னது போல நல்லது நடக்கும். மிஸ் பண்ணிடாதீங்க அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்