
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தேடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அந்த நல்ல விஷயம் கூடிய விரைவில் நடக்க வேண்டும். அந்த நல்லது நடந்தால் வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகிவிடலாம், என்று வைத்துக் கொள்வோமே.
உங்களுடைய தேடலை பூர்த்தி செய்ய நீங்கள் எதிர்பார்க்கும், அந்த நல்ல விஷயம் சீக்கிரமே நல்லபடியாக நடக்க ஒரு அரிய வாய்ப்பு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன வாய்ப்பு தெரியுமா. நாளை வரவிருக்கும் அபிஜித் நட்சத்திர நேரம். அபிஜித் நட்சத்திர நேரத்தில் இந்த பிரபஞ்சத்திடம், அந்த கிருஷ்ண பரமாத்மாவிடம், இறைவனிடம் என்ன கேட்டாலும் அது உங்களுக்கு அப்படியே கிடைக்கும் என்பதுதான் நம்பிக்கை.
அபிஜித் நட்சத்திர நேரம் என்பது மாதத்தில் ஒரு நாள் வரும். அதுவும் 24 நிமிடங்கள் தான் வரும். இந்த ஏப்ரல் மாதத்தின் அபிஜித் நட்சத்திர நேரம் நாளை வரவிருக்கிறது. இது கடவுள் நமக்கு கொடுத்த வரம். இந்த வரத்திற்கு மேலும் ஒரு வரமாக, வேண்டிய வரங்களை பெற ஒரு சக்தி வாய்ந்த, மந்திர வார்த்தையையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை ஆங்கிலத்தில் சுவிட்ச் வேர்ட் என்று சொல்லுவார்கள்.
மிக மிக எளிமையான வார்த்தை தான். வேண்டியதை உடனே உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கும் மந்திர வார்த்தை இதுதான். “Treem” ட்ரீம் இதுதாங்க அந்த சுவிட்ச் வேர்ட். இந்த வார்த்தையை அபிஜித் நட்சத்திர நேரம் வரும்போது, அந்த 24 நிமிடமும் நீங்கள் உச்சரிக்கும் பட்சத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் நல்லது கூடிய விரைவில் உங்களுக்கு நடந்து விடும்.
நாளை திங்கட்கிழமை என்பதால் எல்லோருக்கும் வேலை இருக்கும். வெளியில் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். அபிஜித் நட்சத்திரம் நேரம் வரும்போது, நீங்கள் வெளியிடங்களில் இருந்தால் ஒரு நிமிடம் கண்களை மூடி வேண்டுதலை சொல்லி, இந்த வார்த்தையை ஒருமுறை சொன்னால் கூட, உங்களுடைய வேண்டுதல் அதிவிரைவாக பலிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
வீட்டில் இருந்தால் பூஜை அறையில் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி பிரார்த்தனை செய்து, இந்த வார்த்தையை 108 முறை அல்லது 308 முறை சொல்லுவதன் மூலம் நீங்கள் வேண்டியதை எளிதில் அடைய முடியும்.
21-4-2025 திங்கட்கிழமை மதியம் 12:25pm – 12:49pm மணி வரை இந்த அபிஜித் நட்சத்திர நேரமானது நமக்கு இருக்கிறது. இந்த நேரத்தில்தான் நீங்கள் இறைவனிடம் வேண்டுதலை வைத்து மேலே சொன்ன அதிசக்தி வாய்ந்த வசீகர மந்திர வார்த்தையை சொல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 24 நிமிடங்கள் மிக மிக அதிசக்தி வாய்ந்த நிமிடங்கள்.
இதையும் படிக்கலாமே: புது வண்டி வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை.
நீங்கள் ஆசைப்பட்ட எந்த ஒரு நல்ல விஷயத்தை அடைய வேண்டும் என்றாலும் நாளை வரவிருக்கும் இந்த 24 நிமிடங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.