- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 21-4-2025 அபிஜித் நட்சத்திர நேர வழிபாடு

நாளை 21-4-2025 அபிஜித் நட்சத்திர நேர வழிபாடு

- Advertisement -

ஜோதிடத்தில் மொத்தமாக 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. இதில் நம்மில் பல பேர் அறியாத 28 வது நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் மாதத்தில் ஒரு முறை 24 நிமிடங்கள் வரும். அதிசக்தி வாய்ந்த இந்த 24 நிமிட அபிஜித் நட்சத்திர நேரம், இந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வந்திருக்கிறது.

அதாவது நாளைய தினம் திங்கட்கிழமை எந்த நேரத்தில் இந்த அபிஜித் நட்சத்திர நேரம் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் இறைவனிடம் எப்படி வேண்டுதல் வைத்தால், நாம் வேண்டிய வரங்களை எல்லாம் நொடிப்பொழுதில் பெறலாம். ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

21-4-2025 திங்கட்கிழமை மதியம் 12:25pm – 12:49pm மணி வரை இந்த அபிஜித் நட்சத்திர நேரமானது நமக்கு இருக்கிறது. இந்த 24 நிமிடங்கள் மிக மிக அதிசக்தி வாய்ந்த நிமிடங்கள். இந்த நேரத்தில் இறைவனிடம் நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனடியாக கிடைக்கும். நம்மில் பல பேருக்கு இந்த நேரத்தை பற்றி தெரிந்திருக்கும். இப்போது சோசியல் மீடியாவில் மாதம் தோறும் அனைவருமே இந்த நேரத்தை பகிர்கிறார்கள்.

இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த 24 மணி நேரத்தில் பூஜையறையில் இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு, கிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைத்து நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது கிடைக்கும். ஆனால் அது நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு தேவையான கோரிக்கையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

எதிலுமே ஒரு நியாயம் இருக்க வேண்டும் அல்லவா. இந்த 24 நிமிடங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை இறைவனிடம் கேட்டு வீணடிச்சிடாதீங்க. பொக்கிஷமான 24 நிமிடத்தை கிருஷ்ண பரமாத்மா நம் கையில் கொடுத்திருக்கின்றார். அதுவும் மாதம் ஒருமுறைதான் இந்த நிமிடம் வரும். உங்களுக்கு தேவையான விஷயங்களை இந்த நேரத்தில் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் கடன் சுமை தீர, வருமானம் பெருக, கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கூட கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கலாம். கோடி கோடியாக சம்பாதிக்க நீங்க முயற்சி செய்றீங்க. ஒரு வியாபாரத்தில் முதலீடு போட்டு இருக்கீங்க. அப்போது அதில் லாபம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

- Advertisement -

நான் எதுவுமே செய்யவில்லை, எனக்கு கோடி ரூபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்தால், நிச்சயம் அது பலிக்காது, நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் வழிபாட்டை பின்பற்றினால் போதும். வாழ்க்கையில் உங்களுக்கு தேவையானதை கேட்டு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் படிக்க வேண்டிய மந்திரமும் இருக்கிறது.‌ அதையும் இந்த இடத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வோம்.

அபிஜித் நட்சத்திர ஸ்துதி

அபிஜித ஆகமாந்து தீர
அபிஜிதாம்பர நட்சத்ராணாம்
நாததீய ஜோதினாம்
நல கங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம்
பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்.

இதையும் படிக்கலாமே: நியாயமான வேண்டுதல் நிறைவேற

அபிஜித் நட்சத்திர நேரத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு இந்த மந்திரத்தை படிக்கவும். சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை படிப்பது சுலபம்தான். இருந்தாலும் உங்களுக்கு படிப்பதில் சிரமம் இருந்தால், இந்த மந்திர வரிகளை யூட்யூபில் போட்டு பாருங்கள். நிறைய பேர் இதை உச்சரித்து வீடியோ பதிவிட்டு இருப்பார்கள். அந்த மந்திரத்தை இரண்டு முறை காதால் கேட்டால் இதை நீங்கள் சுலபமாக படித்து விடலாம். உங்களுக்கு இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் இவைகளை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்