
பொதுவாகவே ஒரு மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றி அரை மணிக்கு மேல் சிந்திக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவு சிந்தித்தாலும் நடக்கப் போவது தான் நடக்கப் போகிறது என்று நினைத்து விட்டு விட வேண்டும். 12 ராசிக்காரர்களில் இந்த ராசிக்காரர்கள் மட்டும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சிந்தித்துக் கொண்டே ஓவர் திங்கிங் செய்வார்கள். மூளைக்கு ஓய்வு கொடுக்காமல், கல் நெஞ்சக்காரர்களாக இருக்கும் அந்த 4 ராசிக்காரர்கள் யாரெல்லாம்? என்னும் ஜோதிடம் சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
ஜோதிடத்தில் சில ராசிக்காரர்களின் குணத்தை மாற்றவே முடியாதாம். அந்த வகையில் இந்த நான்கு ராசிக்காரர்கள் எப்போதும் ஒரு விஷயத்தை மண்டைக்கு ஏற்றி விட்டால், அதை போட்டு அலசி ஆராய்ந்து மூளைக்கு வேலையை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் மூளைக்கு வாய் என்று ஒன்று இருந்தால், அது கதறி அழுது விடும், அவ்வளவு அட்டகாசம் செய்து விடுவார்கள்.
இவ்வளவு யோசித்தும் இவர்களால் சரியான முடிவை எடுக்க முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் எடுக்க முடியாது. குழப்பமும், தடுமாற்றமும் எப்போதும் எந்த விஷயத்திலும் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். தீர்க்கமான முடிவுகளையும், சரியான ஆலோசனைகளையும் இவர்களால் ஊர்ஜிதமாக வழங்க முடியாது. மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை சொல்வதில் கூட, இவர்கள் வென்று விடுவார்கள், ஆனால் இவர்களுக்கு என்று ஒரு விஷயம் வரும் பொழுது இவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது.
தேவையில்லாமல் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் யோசிப்பது மட்டுமல்லாமல் அந்த யோசனையை மற்றவர்களிடமும் சொல்லி அவர்களையும் சிந்திக்க வைத்து விடுவார்கள். அந்த நான்கு ராசிக்காரர்களில் முதலாவதாக இருப்பது கன்னி ராசி. கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சிந்திப்பவர்கள். ஒரு டிரஸ் வாங்குவதாக இருந்தால் கூட, அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த வரிசையில் கடகம், துலாம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களும் வரிசையில் நிற்கிறார்கள்.
இந்த நான்கு ராசிக்காரர்களும் ஓவர் திங்கிங் செய்பவர்கள். இது அப்படி நடந்து விடுமோ, இல்லை இப்படி நடந்து விடுமோ, நாம் இப்படி பேசலாமா? அல்லது அப்படி பேசலாமா? நாளை எப்படி அவர்களை கையாளுவது? என்ன மாதிரியான பேச்சை கொடுத்தால் அந்த விஷயம் சுமூகமாக முடியும்? என்று யோசித்து யோசித்து சரியான தூக்கத்தை கூட இழந்து விடுவார்கள். அவ்வளவு சிந்தனைகள் இவர்களுடைய மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். மனதில் பட்டதை எல்லாம் சட்டென பேசி விடமாட்டார்கள். அடுத்தவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ள மாட்டார்கள். இதனாலேயே இவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே:
கடனை அடைக்கும் சித்தர் மந்திரம்
நல்லவர்களுக்கு தான் சோதனை என்பது போல, இந்த நான்கு ராசிக்காரர்களும் எல்லோரையும் எளிதில் நம்பாவிட்டாலும், எல்லார் மீதும் பேரன்பை செலுத்துபவர்கள். இவர்களுக்குத்தான் சோதனைகளும் அதிகம் வரும். எல்லோரையும் பேச்சு திறனால் எளிதில் கவர்ந்து விடக்கூடிய இந்த நான்கு ராசிக்காரர்கள் தடுமாற்றமும், மனக்குழப்பமும் இல்லாமல் இருந்தால் மற்றவர்களின் மரியாதையை இன்னும் கூடுதலாக பெறுவார்கள். எந்த விஷயத்தையும் சுருக்கமாக சிந்தியுங்கள்! இது இவ்வளவு தான்.. இவ்வளவே தான்… முடிந்து விட்டது, இனி இதில் சிந்திக்க ஒன்றும் இல்லை, என்று கடந்து அடுத்த வேலையை செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்.