
இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய பிரதோஷம். நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருந்தாலும் சரி, அல்லது வீட்டில் இருந்தபடியே சிவபெருமானை வழிபாடு செய்திருந்தாலும் சரி, இன்று வழிபாடு செய்ய தவற விட்டவர்களாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல், நிறைவேறாத ஆசை நிறைவேறாத கனவு, இப்படி ஏதோ ஒன்று கட்டாயம் இருக்கும்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கான சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்தான் இது. இன்று இரவு உங்களுடைய வேலையை எல்லாம் முடித்து விடுங்கள். ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு உங்களுடைய கோரிக்கையை சொல்லுங்கள்.
கோரிக்கை ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், உடல் ஆரோக்கியம் பெற வேண்டும், பண பிரச்சனை தீர வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவ வேண்டும், என்று ஒரு வரியில் உங்களுடைய கோரிக்கையை 27 முறை சொல்லுங்கள்.
இத்தனை கோரிக்கையை சொல்லாதீர்கள் ஒரு கோரிக்கையை தயவு செய்து சொல்லுங்கள் இல்லையென்றால் பிரபஞ்சமே குழம்பிவிடும். தண்ணீரை கையில் வைத்துக் கொண்டே ஒரு கோரிக்கையை சொல்லிவிட்டு, பிறகு சிவபெருமானை மனதார நினைத்து அந்தக் கோரிக்கை உங்களுக்கு நல்லபடியாக நடந்து விட்டது என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் நல்ல வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்கள், நல்ல வேலை கிடைத்ததாகவும், அந்த வேலையில் நாளைக்கு சென்று சேர போவதாகவும் நினைத்துக் கொண்டு ‘மவ சிவ’ என்ற சிவ மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு கையில் இருக்கும் தண்ணீரை நீங்கள் குடித்து விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.
நீங்கள் சொன்ன வேண்டுதலையும் அந்த தண்ணீர் தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும், நீங்கள் சொன்ன மந்திரத்தையும் அந்த தண்ணீர் தன்னகத்தை உயர்த்துக் கொள்ளும், இந்த தண்ணீரை குடிக்கும் போது நீங்கள் வேண்டிய வேண்டுதலை இந்த பிரபஞ்சம் சீக்கிரம் நிறைவேற்றி தருவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும். நம்பிக்கையோடு இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம்
மறுநாள் காலையில் இருந்து இந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறது, அதற்கு தகுந்தபடி இன்று இரவு வேண்டுதலை வையுங்கள். நாளை முதல் உங்களுடைய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அந்த சிவபெருமானின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.