- Advertisement -

5-3-2025 வளர்பிறை சஷ்டி, கிருத்திகை வழிபாடு

- Advertisement -

வாடகை வீட்டில் குடி இருக்கின்றோம். சொந்தமாக ஒரு சின்ன இடத்தையாவது வாங்கி என்னுடைய பிள்ளை பெயரில் கிரயம் செய்து விட வேண்டும் என்ற ஆசை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. சொந்தமாக இருக்கும் நிலத்தில் ஒரே ஒரு வீடு கட்டி விட்டால், எத்தனை சந்தோஷம் இருக்கும் என்ற ஆசையும் நம்மில் இருக்கிறது. சொந்த வீடும் இல்லை. நிலமும் இல்லை. ஏதாவது ஒன்று எங்களுக்கு கிடைக்காதா? முருகா என்று ஏங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இது எல்லா பிரச்சனைகளையும் தாண்டி, அன்றாட நாட்களை கழிப்பதே சிரமம். வருமானம் கொஞ்சம் பெருக கூடாதா. இந்த கடன் சுமை கொஞ்சம் குறைய கூடாதா முருகா. அந்த கடைக்கண் பார்வையை கொஞ்சம் என் மீது திருப்பி, என்னுடைய கஷ்டத்தையும் கொஞ்சம் குறைத்து வை முருகா. பாரத்தை தாங்க முடியவில்லை. இந்த பாரத்தை இறக்கி வைத்தால் போதும். நிம்மதியாக சந்தோஷமாக வாழ தொடங்கி விடுவேன் என்று கேட்காத மனிதர்களே இல்லை.

- Advertisement -

முருகனது காதில் இதெல்லாம் விழவில்லையா? ஏன் பக்தர்களுடைய பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றாமல் சோதிக்கின்றான். ஏதோ ஒரு கர்ம வினை தாங்க காரணம். அடுத்தவர்களுக்கு நல்லதே செய்யுங்கள். யாருக்கும் துரோகம் செய்யாமல், முருகனை வழிபாடு செய்து கொண்டே வாருங்கள். நீங்கள் கேட்டதை எல்லாம் நிச்சயம் முருகன் ஒருநாள் உங்களுக்காக கொடுப்பான். அதற்கான நேரமும் காலமும் நிச்சயம் கைகூடி வரும். அந்த வகையில் பார்த்தால் உங்கள் கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள சில பல வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

முருகன் வழிபாடு

நாளைய தினம் புதன்கிழமை 5-3-2025 சஷ்டி திதியும் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரமும் இருக்கிறது. முருகனுக்கு உகந்த இந்த நாளில் முருகப்பெருமானை மனமுருகி வழிபாடு செய்ய நம் ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்கள் எல்லாம் விலகி, நமக்கான நல்லது நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை. சரி இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடி எப்படி மேற்கொள்வது.

- Advertisement -

நாளை காலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். காலை நேரத்தில் பூஜை செய்ய முடியும் என்றாலும் செய்யலாம். மாலை நேரத்தில் முருகனுக்கு பூஜை செய்ய முடியும் என்றாலும் செய்யலாம். அது உங்கள் விருப்பம். துவரம் பருப்பு, பச்சரிசி போட்டு துவரம் பருப்பு சாதம் செய்து கொள்ளுங்கள். சாம்பார் சாதம் போல மணக்க மணக்க நெய் விட்டு செய்தாலும் சரிதான்.

இந்த சாதத்தை முருகனுக்கு நெய்வேதியமாக படைக்க வேண்டும். மண் குடுவையில் படைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. சின்னதாக மண் பானை அல்லது சின்னதாக மண் சட்டி எது வைத்திருந்தாலும் அதில் நீங்கள் செய்த இந்த துவரம் பருப்பு சாதத்தை போட்டு முருகனுக்கு நெய்வேத்தியம் வைத்து, ஒரே ஒரு செம்பருத்திப் பூவை முருகனுக்கு வைத்து உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்பு வேண்டிய வரங்களை முருகனிடம் கேளுங்கள் சொந்த வீடு வேகமாக வாகனம் வேண்டுமா? நிலம் வேண்டுமா. கடன் சுமை குறைய வேண்டுமா. குழந்தை பாக்கியம் வேண்டுமா. திருமணம் நடக்க வேண்டுமா? ஆரோக்கியம் தேவையா. என்ன கேட்டாலும் அந்த முருகன் அப்படியே வாரி வாரி கொடுத்து விடுவான்.

பிரார்த்தனை செய்து கொண்டு வழக்கம் போல, தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து, இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த பிரசாதத்தில் கொஞ்சம் கூடுதலாக செய்து இயலாத இரண்டு பேருக்கு அன்னதானம் செய்தாலும் மிக மிக நல்லது.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் மந்திர வார்த்தைகள்

நாளைய தினம் அதிசக்தி வாய்ந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களை விட பாக்கியசாலி இந்த உலகத்தில் யாரும் இல்லை. உங்கள் கர்மா குறைய போகிறது என்பதற்காகவே அந்த முருகன் இந்த பதிவை உங்கள் கண்முன்னே கொண்டு நிறுத்தி உள்ளான் என்பது தான் அர்த்தம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. பரிகாரத்தை படித்து, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்க, வெற்றி கடவுளை வேண்டி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -